அரசூர் வம்சம் தொடங்கி வைத்த ஒரு பிரம்மாண்டமான மாய யதார்த்த உலகம் இந்தப் புத்தகத்தில் மேலும் விரிவடைந்து நம்மை உள்ளிழுத்துக்கொள்கிறது.எது இயல்பு, எது அசாதாரணம்? இந்த இரண்டையும் வேறுபடுத்திக் காட்டுவது அவ்வளவு சுலபமல்ல. வாழ்க்கையிலேயே இது சாத்திய-மில்லாதபோது ஒரு நாவலில் எதற்காக இந்த இரண்டையும் வேறுபடுத்திக் காட்டவேண்டும்?ஒரு மாறுதலுக்கு, நிஜத்தையும் அதைவிடவும் சுவையான கற்பனையையும் ஒன்றோடொன்று கலக்க-விட்டால் என்னாகும்? இரண்டும் ஒன்றையொன்று சந்தித்துக்கொள்ளும்போது என்ன நடக்கும்? இரா. முருகனின் இந்தப் புதிய நாவலில் கனவும் நனவும், நிஜமும் கற்பனையும், சாதாரணமும் அசாதாரணமும் பின்னிப் பிணைந்துள்ளன.பரவசமளிக்கும், பயமூட்டும் ஒரு புதிய அனு-பவத்தை அளிக்கும் அச்சுதம் கேசவம் நாவலைத் தனியொரு பாகமாகவும் அணுகலாம்; அரசூர் வம்சத்தின் தொடர்ச்சியாகவும் பொருத்திக்-கொள்ளலாம். தமிழ்ப் படைப்புலகம் இந்நாவலை நீண்டகாலத்துக்கு விவாதிக்கப்போகிறது. அதைவிடவும் நீண்ட காலத்துக்கு நம் நினைவுகளில் இது நிறைந்திருக்கப்போவது உறுதி.1953 ஆகஸ்ட் 28 அன்று பிறந்தார். நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், ஐந்து நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். மலையாளத்தில் இருந்து தமிழுக்குக் குறிப்பிடத்தக்க மொழிபெயர்ப்புகள் செய்துள்ளார். இவரது பல படைப்புகள், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.
- Edition: 01
- Published On: 2015
- ISBN: 9789384149529
- Pages: 384
- Format: Paperback