சீனு ராமசாமி 1975ஆம் வருடம், அக்டோபர் 13-ஆம் தேதி மதுரையில் திரு. இராமகிருஷ்ணன் - திருமதி. கோவிந்தம்மாள் தம்பதியின் முதல் மகனாகப் பிறந்தார். பள்ளிப
சீனு ராமசாமி 1975ஆம் வருடம், அக்டோபர் 13-ஆம் தேதி மதுரையில் திரு. இராமகிருஷ்ணன் - திருமதி. கோவிந்தம்மாள் தம்பதியின் முதல் மகனாகப் பிறந்தார். பள்ளிப்பருவத்தை மதுரை சார்லஸ் பள்ளி மற்றும் டி.வி.எஸ். பள்ளியிலும், தனது இளங்கலை கணித பட்டயப்படிப்பை மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியிலும் நிறைவு செய்தார். இவர், தமிழ்மொழியின் மீது நாட்டமும் புலமையும் ஆழ்ந்த ஈடுபாடும் கொண்டு, பின் வெற்றுச் சொல், மிகை உணர்ச்சி கலைந்து, கவிதை உருவாக்கும் நவீன மரபில் இயங்கத் தொடங்கியபோது தன் கவிதைகளாலும் கவனிக்கப்பட்டார். நவீன இலக்கியத்தையும், அதேசமயம் 'மணிக்கொடி' எழுத்தாளர்களின் வழியே செவ்வியல் மரபையும் அறிந்து, அதன் அனுபவப் பெருக்கில் கவிஞராகவும், காட்சி ஊடகத்தில் இயக்குநராகவும் பயணித்து வருகிறார். திரைப்பட இயக்குநர்கள் பாரதிராஜா, மகேந்திரன், பாலுமகேந்திரா, கே.பாலசந்தர் ஆகியோரால் உந்தப்பட்டு திரைப்படத்துறையில் அடியெடுத்து வைத்த இவர், பின்நாட்களில் உலக சினிமாக்களில் தன்னைக் கரைத்துக்கொண்டு, சத்யஜித்ரேயின் நவீன யதார்த்த கலைமரபில் இயங்கி வருகிறார். இதுவரை ஒன்பது திரைப்படங்களை இயக்கியிருக்கும் சீனுராமசாமி, தனது இரண்டாவது திரைப்படமான 'தென்மேற்குப் பருவக்காற்று திரைப்படத்துக்கு 'சிறந்த மாநில மொழி திரைப்படத்துக்கான தேசிய விருது' பெற்றார். 2015ம் ஆண்டு, தென் தமிழகத்தின் மிகப் பழமையான மதுரைக் கல்லூரி, 'பவளவிழா' கொண்டாடியபோது, இவருக்கு 'மக்கள் இயக்குநர்' என்ற பட்டத்தைக் கொடுத்து கௌரவித்தது. ரஸ்ய அரசின் தமிழ்க் கலாசார பிரதிநிதியாக மாஸ்கோவுக்குச் சென்று கலந்துகொண்டார். அங்கு நடைபெற்ற 45ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் இவரது 'மாமனிதன் திரைப்படம் பரிசுபெற்றது. அமெரிக்காவில் நடைபெற்ற 56ஆவது HOUSTON WEST சர்வதேச திரைப்பட விழாவில் 'சிறந்த திரைப்பட இயக்குநர்' விருது பெற்றார்.கலையும் வாழ்வுமாக, நாளும் பொழுதுமாக தனது பொன்விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தருணத்தில், 2023ஆம் ஆண்டு, 'புகார்பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை' என்கிற கவிதைத் தொகுப்பை 'டிஸ்கவரி பதிப்பகம்' மூலம் வெளியிட்டார். இந்தக் கவிதை நூலுக்கு, 'கவிதை உறவு* 50ஆவது இலக்கிய விழாவில் சிறந்த நூலுக்கான விருது, 2023ஆம் ஆண்டுக்கான 'படைப்பு' விருது, 'சௌமா'வின் 2023ஆம் ஆண்டுக்கான சிறந்த கவிதை நூல் விருது ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன. இவரது கவிதைகளை THE DAYS OF SMALL BROOK AND OTHERS POEMS' என பேராசிரியர் இளங்கோ நடேசன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். என்.சி.பி.ஹெச், பதிப்பகம், இவரது 'புகார்பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை' கவிதைகளை THE CAT SLEEPING UPON THE COMPLAINT BOX' என லதா ராமகிருஷ்ணன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த நூலை வெளியிட்டிருக்கிறது. அந்த ஆங்கில நூல் BANGLURU CHRIST UNIVERSITY மாணவர்களுக்குப் பாடமாக இருக்கிறது. இந்தக் கவிதைத் தொகுப்பை, சாகித்ய அகாதமி விருது பெற்ற ஜில்லாலே பாலாஜியின் தெலுங்கு மொழிபெயர்ப்பில், "PHIRYADU PETTAEPAI NIDURISTUNNU PILLI' என்ற தலைப்பில் 'சாயா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. இதுவரை, 'காற்றால் நடந்தேன் (2011). புகார் பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை (2023), மாசி வீதியின் கல் சந்துகள் (2024)' 'கோயில் யானையின் சிறுவன் (2024)' 'நினைவில் ஒளிரும் ஜிமிக்கிக் கம்மல் (2024) ' 'மேகங்களின் பேத்தி (2025) ' என ஆறு கவிதை நூல்களைப் படைத்திருக்கிறார். இவரது கவிதைகள் Days of small brook and other poems The Cat sleeping upon the complaint box என ஆங்கிலத்தில் வரவேற்பை பெற்றுள்ளன
Read More
Read Less
By continuing, you agree to our Terms of Use and Privacy Policy