பெர் பெதர்சன் நார்வீஜிய எழுத்தாளரான பெர் பெதர்சன் 1952 ஜூலை 18 அன்று பிறந்தார். ஐந்து நாவல்களும் ஒரு சிறுகதைத் தொகுப்பும் வெளியாகியிருக்கின்றன. ஐம்பது
பெர் பெதர்சன் நார்வீஜிய எழுத்தாளரான பெர் பெதர்சன் 1952 ஜூலை 18 அன்று பிறந்தார். ஐந்து நாவல்களும் ஒரு சிறுகதைத் தொகுப்பும் வெளியாகியிருக்கின்றன. ஐம்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் இவரது படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மதிப்புக்குரிய இலக்கியப் பரிசுகள் பலவற்றை வென்றுள்ளார். 1990இல், நார்வேயிலிருந்து டென்மார்க் சென்ற போக்குவரத்துப் படகில் நேர்ந்த தீ விபத்துக்குத் தமது பெற்றோர், இளைய சகோதரர் மற்றும் ஒர் உறவினரைப் பறிகொடுத்தார். இவரது முதல் நாவலைப் படித்துவிட்டு, ‘உனது அடுத்த நூல் இவ்வளவு சிறுபிள்ளைத்தனமாக இருக்காது என்று நம்புகிறேன்’ என்று கருத்துரைத்த அம்மா, அடுத்த வாரமே விபத்தில் இறந்துபோனார். நார்வீஜிய எழுத்தாளர் நட்ஹாம்ஸனையும் அமெரிக்கரான ரேமண்ட் கார்வரையும் தமது ஆதர்சங்களாகக் கொண்ட பெர் தெர்சன் நூலகராகப் பயிற்சி பெற்றவர். முழுநேர எழுத்தாளராவதற்கு முன் புத்தகக்கடை எழுத்தாளராகப் பணிபுரிந்தார். தற்போது ஆஸ்லோவில் வசிக்கிறார். தமிழில் வெளியாகும் ‘குதிரை வேட்டை’, அவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தையும் விருதுகளையும் பெற்றுத் தந்த நாவல். நியூயார்க் டைம்ஸ் புத்தக விமர்சன இதழ் வெளியிட்ட 2007ஆம் ஆண்டின் தலைசிறந்த பத்து நூல்களில் ஒன்றாக இடம்பெற்றது.
Read More
Read Less
By continuing, you agree to our Terms of Use and Privacy Policy