Default Author

லியா மில்ஸ் அயர்லாந்து நாட்டு எழுத்தாளரான லியா மில்ஸ் நாவல், சிறுகதை, புனைவற்ற படைப்பு என்ற தளங்களில் இயங்கிவருபவர். இவரது முதல் படைப்பான ‘அனதர் ஆலிஸ்

லியா மில்ஸ் அயர்லாந்து நாட்டு எழுத்தாளரான லியா மில்ஸ் நாவல், சிறுகதை, புனைவற்ற படைப்பு என்ற தளங்களில் இயங்கிவருபவர். இவரது முதல் படைப்பான ‘அனதர் ஆலிஸ்’ 1996இல் வெளிவந்து ‘ஐரிஷ் டைம்ஸ்’ பத்திரிகையின் சிறந்த நாவல் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. 2005இல் வெளிவந்த அவரது இரண்டாவது நாவலான ‘நத்திங் சிம்பி’ளும் அந்த ஆண்டுக்கான அயர்லாந்தின் சிறந்த நாவலாகப் பரிந்துரை செய்யப்பட்டது. ‘யுவர் ஃபேஸ்’ என்ற இவரது தன் அனுபவ வாய்ப் புற்றுநோய் பற்றிய நூல் 2007இல் வெளிவந்து சிறப்பான வரவேற்பைப் பெற்றது. ‘ஃபாலன்’ என்ற அவருடைய அந்த மூன்றாவது புதினம் 2014இல் வெளியானது. சில சிறுகதைகளையும் எழுதியுள்ள இவர் கலைமேம்பாட்டுக் குழுக்களில் பங்குபெறுவதோடு கலை ஆலோசகராகவும் பணிசெய்கிறார். டப்ளினில் பிறந்து இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் பல ஆண்டுகள் வசித்த பின்னர் தற்போது அயர்லாந்தில் வாழ்ந்துவருகிறார்.

Read More

Read Less

லியா மில்ஸ் நூல்கள் Showing 1-1 of 1 items


Loading...

By continuing, you agree to our Terms of Use and Privacy Policy

Wp Chat