கோணங்கியின் ஆளுமை வியப் பூட்டக்கூடியது. கிராமத்து நினைவுகள் நிரம்பிய மனதும், தீராத புத்தக வேட்கையும் இலக்கற்ற பயணமும் புதிதாக எதையாவது கண்டு அடைய வேண்
கோணங்கியின் ஆளுமை வியப் பூட்டக்கூடியது. கிராமத்து நினைவுகள் நிரம்பிய மனதும், தீராத புத்தக வேட்கையும் இலக்கற்ற பயணமும் புதிதாக எதையாவது கண்டு அடைய வேண்டும் என்ற ஆதங்கமும் நிரம்பிய படைப்பாளி அவர். தன்னைச் சந்திக்க வருபவர்களுடன் சில நிமிசங்களில் தன்னைக் கரைத்துக் கொண்டு விடுபவர். நண்பர்களுக்காக எதையும் செய்யக் கூடியவர். அவரது சட்டை பேனா பை என்று எதை எவர் கேட்டாலும் உடனே தந்துவிடுவார். பருந்தைப் போல அவரும் ஒரு இடத்தில் நில்லாமல் வட்டமடித்துக் கொண்டேயிருப்பார். பழைய இசைத்தட்டுகள், புத்தகங்கள், கலைப்பொருட்கள், புகைப்படங்கள், மைக்கூடு, பேனா, ஹேண்ட் மேட் காகிதங்கள், குதிரையின் கால் எலும்புகள், கூழாங்கற்கள், விதவிதமான ஜோல்னா பைகள் என்று அவர் விசித்திரமான எதைஎதையோ சேகரித்து வந்தபடி இருப்பார். நானும் அவரும் சாலையில் நின்றபடியே வெள்ளரிப்பிஞ்சைத் தின்றோம். ஒரு டவுன்பஸ் வந்து கொண்டிருந்தது. வா ஏறு என்று சொல்லி அதில் ஏறச்சொன்னார். அதில் ஏறி சாத்தூருக்கு ரெண்டு டிக்கெட் என்று கேட்டார். கண்டக்டர் இதுதானே சாத்தூர் என்றதும் இல்லை இப்படியே சுற்றி சர்ச் பின்னாடி போய் பேருந்து நிலையம் வரை செல்லும் தானே. அதற்கு ஒரு டிக்கெட் கொடுங்கள் என்றார். அந்தப் பேருந்தில் சாத்தூரில் ஏறி சாத்தூருக்கு டிக்கெட் கேட்ட முதல்ஆட்கள் நாங்கள் தான். ~கோணங்கி குறித்து எஸ்.ராமகிருஷ்ணன்
Read More
Read Less
By continuing, you agree to our Terms of Use and Privacy Policy