கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று அழைக்கப்படும் கி. ராஜநாராயணன் 16 செப்டம்பர் 1922 அன்று கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தில் ஸ்ரீகிருஷ்ண
கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று அழைக்கப்படும் கி. ராஜநாராயணன் 16 செப்டம்பர் 1922 அன்று கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தில் ஸ்ரீகிருஷ்ண ராமானுஜம், லட்சுமி அம்மாள் தம்பதியருக்கு ஐந்தாவது மகனாகப் பிறந்தார் . கி.ராவின் முழுப்பெயர், ராயங்குல ஸ்ரீ கிருஷ்ண ராஜ நாராயணப் பெருமாள் ராமானுஜ நாயக்கர். படைப்புலகம்: “வாய்மொழி வரலாற்றைப் பொது வரலாறு ஒருபோதும் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், அதை மாற்றித் தனது படைப்புகளின் வழியே வாய்மொழி வரலாற்றின் உண்மைகளை வரலாற்றின் சாட்சியங்களாக மாற்றினார் கி.ரா. ‘கோபல்ல கிராமம்’, ‘கோபல்லபுரத்து மக்கள்’ இரண்டு படைப்புகளும் இதற்கான சிறந்த உதாரணங்கள்.” - எஸ்.ராமகிருஷ்ணன். கரிசல் மண்னையும், அதன் மனிதர்களையும் பற்றி எழுதிய கி.ரா , கதைகள், நாவல், குறுநாவல், கட்டுரை என விரிவான தளத்தில் இயங்கினார். கரிசல் வட்டாரத்தில் சிறப்பாக வழங்கும் தமிழ்ச் சொற்களுக்கான கரிசல் வட்டார வழக்கு அகராதியை உருவாக்கினார். நாட்டுப்புற இலக்கியங்களைத் தேடி, ஆராய்ந்து ஒரு தொகுப்பாக வெளியிட்டார். விருதுகள்: - சாகித்ய அகாடமி விருது, - இலக்கிய சிந்தனை விருது, - தமிழக அரசின் 2021ம் ஆண்டுக்கான உ.வே.சா விருது, - கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2016ம் ஆண்டுக்கான தமிழ் இலக்கியச் சாதனை விருது நன்றி: www.kirajanarayanan.com
Read More
Read Less
By continuing, you agree to our Terms of Use and Privacy Policy