ஜான் பான்வில் (1945) ஐரிஷ் நாவலாசிரியரும் திரைக்கதையாசிரியருமான ஜான் பான்வில் அயர்லாந்தின் கடலோர நகரான வெக்ஸ்போர்டில் பிறந்தார். பள்ளிப் படிப்புக்குப்
ஜான் பான்வில் (1945) ஐரிஷ் நாவலாசிரியரும் திரைக்கதையாசிரியருமான ஜான் பான்வில் அயர்லாந்தின் கடலோர நகரான வெக்ஸ்போர்டில் பிறந்தார். பள்ளிப் படிப்புக்குப் பிறகு ஓவியக் கலையிலும் கட்டடக் கலையிலும் மேற்படிப்பைத் தொடர்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பான்வில் எழுத்தராகப் பணியில் அமர்ந்தார். சலுகைக் கட்டணத்தில் இடங்களைப் பார்க்க முடியும் என்பதே இந்தப் பணியில் ஈடுபடக் காரணம். கிரீஸ், அமெரிக்கா ஆகிய நாடுகளில் சிறிது காலம் வசித்தார். பின்னர் அயர்லாந்து திரும்பிப் பத்திரிகையாளராகப் பணியாற்றினார். நவீன ஆங்கிலத்தில் எழுதுபவர்களில் நுட்பமான நடைக்கு உரியவர் என்று பாராட்டப்படும் பான்வில்லின் முதல் நாவல் ‘நைட்ஸ்பான்’ 1971இல் வெளியானது. ‘ரெவ்ல்யூஷன்ஸ் டிரையாலஜி’ என்ற முக்கதை மூலம் இலக்கியப் புகழ்பெற்றார். பெஞ்சமின் பிளாக் என்ற புனைப் பெயரில் குற்றவியல் கதைகளும் எழுதியுள்ளார். 2005இல் வெளிவந்த பான்வில்லின் பதிமூன்றாவது நாவலான ‘கடல்’ அவரை உலகப் புகழ்பெறச் செய்தது. அந்த ஆண்டு இதே நாவலுக்காக அவர் ‘மான் புக்கர் பரிசை’ப் பெற்றார்.
Read More
Read Less
By continuing, you agree to our Terms of Use and Privacy Policy