Default Author

அய்ஃபர் டுன்ஷ் (1964) ‘நான் எழுதுகிறேன். ஏனெனில், எனக்கு அளிக்கப்பட்டிருக்கும் ஒற்றை வாழ்க்கையுடன் நிறைவடைய என்னால் முடியாது. நான் நானாக இருக்கவும் அத

அய்ஃபர் டுன்ஷ் (1964) ‘நான் எழுதுகிறேன். ஏனெனில், எனக்கு அளிக்கப்பட்டிருக்கும் ஒற்றை வாழ்க்கையுடன் நிறைவடைய என்னால் முடியாது. நான் நானாக இருக்கவும் அதே நேரத்தில் பிறராக இருக்கவுமே எழுதுகிறேன்’ என்று குறிப்பிடும் அய்ஃபர் டுன்ஷ், சமகாலத் துருக்கி இலக்கியத்தின் முதன்மையான ஆளுமைகளில் ஒருவர். அடாபஸாரியில் பிறந்தார். இஸ்தான்புல் பல்கலைக்கழகத்தின் அரசியல்துறையில் பயின்று பட்டம் பெற்றார். பல்கலைக்கழக நாட்களிலிருந்தே கலை, இலக்கிய, கலாச்சார இதழ்களில் எழுதத் தொடங்கினார். கும்ஹுரியத் நாளிதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் பெற்ற முதல் பரிசு அய்ஃபர் டுன்ஷ்க்கு இலக்கிய மதிப்பை ஏற்படுத்தியது. யாபி க்ரெதி பதிப்பகத்தின் தலைமைப் பதிப்பாசிரியராகச் சில ஆண்டுகள் பணிபுரிந்தார். இரண்டு நாவல்கள், ஐந்து சிறுகதைகள், இரண்டு வாழ்க்கைக் குறிப்புகள், ஓர் ஆய்வு நூல் – ஆகியவை வெளிவந்துள்ளன. தனது சிறுகதையை அடிப்படையாகக்கொண்ட படத்துக்குத் திரைக்கதையும் எழுதியிருக்கிறார்.

Read More

Read Less

அய்ஃபர் டுன்ஷ் நூல்கள் Showing 1-1 of 1 items


Loading...

By continuing, you agree to our Terms of Use and Privacy Policy

Wp Chat