ஆல்பர்ட் காம்யூ (1913 – 1960) சிறுகதைகள், நாடகங்கள், கட்டுரைகள், நாவல்கள் எனப் பன்முக ஆளுமைகொண்ட இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியப் படைப்பாளி, மெய்யி
ஆல்பர்ட் காம்யூ (1913 – 1960) சிறுகதைகள், நாடகங்கள், கட்டுரைகள், நாவல்கள் எனப் பன்முக ஆளுமைகொண்ட இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியப் படைப்பாளி, மெய்யியலாளர், குறிப்பாக அபத்தவாத அபிமானி. தம்முடைய படைப்புகள் எதுவென்றாலும் பொதுவில் மனிதர் வாழ்க்கையின் விளைவுகள் தரும் அபத்த விழிப்புணர்வின் துணையுடனும்; அந்த அபத்தத்திற்கு விடைதேட முனைந்தவர்போல இருத்தலுக்குப் பொருள்தரும் கிளர்ச்சியின் துணையுடனும் மானுடத்தைக் காண்பவர். 1957ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெற்றபோது வயது 44. 1942ஆம் ஆண்டு வெளிவந்த ‘Le Mythe de Sisyphe’ என்ற நூல் தற்கொலை, இருத்தலை மையப்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு அபத்தவாதத்தை விவாதிக்கப் ‘புரட்சியாளன்’ (L’ Homme revolte) 1951ஆம் ஆண்டு வெளிவந்தது. நாவல்களில் ‘அந்நியன்’ அடைந்த புகழைக் கட்டுரைகளில் இந்நூல் பெற்றது; விவாதத்திற்கும் ஆய்வுக்கும் உரியது.
Read More
Read Less
By continuing, you agree to our Terms of Use and Privacy Policy