அ. கா. பெருமாள்

அ.கா.பெருமாள் (A. K. Perumal) நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர். களத்தில் சிதறிக்கிடக்கும் வழக்காறுகளைச் சேகரித்து, ஆராய்ந்து எழுதுவது இவர் பணி. நாகர்க

அ.கா.பெருமாள் (A. K. Perumal) நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர். களத்தில் சிதறிக்கிடக்கும் வழக்காறுகளைச் சேகரித்து, ஆராய்ந்து எழுதுவது இவர் பணி. நாகர்கோவிலில் வசித்து வரும் அ.கா.பெருமாள் அவர்களின் இயற்பெயர் அ.காக்கும் பெருமாள் (1947, பறக்கை, குமரி மாவட்டம்) நாட்டார் வழக்காற்றியல் அறிஞர், வரலாற்றாசிரியர். இவரது தந்தை அழகம்பெருமாள். அம்மா பகவதிஅம்மா. தந்தை மலையாள ஆசிரியர். நீதிமன்ற மொழிபெயர்பாளர். குமரிமாவட்டத்தை விரிவான வரலாற்றாய்வுக்கு இலக்காக்கிய ஆய்வாளர். தமிழிலக்கியம் முதுகலைப்பட்டம் பெற்றபின் மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் நாட்டார் வழக்காற்றியலில் “நாஞ்சில் நாட்டு வில்லுப்பாட்டுகள்” எனும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். அப்போது இவருடன் ஆய்வுத்தோழராக விளங்கியவர் உலகப்புகழ்பெற்ற நாட்டார் வழக்காற்றியலாளரான ஸ்டுவர்ட் பிளாக்பர்ன் இருந்தார். ஆரல்வாய்மொழி அறிஞர் அண்ணா கலைக்கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். நாட்டார் வழக்காற்றியலிலும் இலக்கியத்திலும் இவரை ஈடுபட வைத்தவர் வெங்கட் சாமிநாதன். வெங்கட் சாமிநாதன் நடத்திய யாத்ரா இதழை இவர் நீண்டகாலம் வெளியிட்டு வந்தார். இவரது ஆய்வுக்கும், பார்வைக்கும் உதவியவர்களில் முக்கியமானவர்கள் அருள்பணி ஜெயபதி மற்றும் எழுத்தாளர் சுந்தர ராமசாமி நன்றி: விக்கிப்பீடியா

Read More

Read Less

By continuing, you agree to our Terms of Use and Privacy Policy

Wp Chat