இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் கிராம மக்களுக்கும் கிராமசபைக்குமே உள்ளது. மக்கள் பாரம்பரியக் கலாச்சாரப் பண்பாட்டுடன் ஒருங்கிணைந்து செயல்பட வழிவகை செய்கின்றது. முடிவெடுக்கும் அதிகாரமும் செயல்படுத்தும் உரிமையும் இவர்களுக்கே உள்ளது. இச்சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட நிலத்தை இவர்களின் வாரிசுகளும் உறவினர்களும் மட்டுமே பயன்படுத்த முடியும்.