டால்ஸ்டாயின் புத்துயிர்ப்பு (Resurrection) நாவல் வெளியானதன் பின்புலம் குறித்து வாசித்துக் கொண்டிருந்தேன், அவரது மற்ற நாவல்களை விட அது அதிக வாசகர்களின் கவனத்தை பெறவில்லை என்று அந்தக் கட்டுரை துவங்கியிருந்த்து, தமிழில் இந்த நாவலை ராதுகா பதிப்பகம் வெளியிட்டுள்ளது, எனக்கு புத்துயிர்ப்பு நாவலில் வரும் மாஸ்லாவை ரொம்பவும் பிடிக்கும், அவளை எனது ஊரில் நான் கண்ட மதினிகளில் ஒருத்தியைப் போலவே நினைக்கிறேன், அவ்வளவு அற்புதமான பெண் , மாஸ்லாவா என அந்தப் பெயரை சொல்வதிலே ஒரு கிளர்ச்சியிருக்கிறது, வேசைமை குறித்து டால்ஸ்டாய் நிறைய எழுதியிருக்கிறார், இவள் அதில் ஒரு புனிதை, ஒருவகையில் இவள் வழியாகவே தனது ஆன்ம மீட்சிக்கான தேடுதலை டால்ஸ்டாய் முன்வைக்கிறார்,
புத்துயிர்ப்பு நாவலின் மீது திடீரெனக் கவனம் கொள்ள காரணமாக இருந்த்து டால்ஸ்டாயின் மூத்த பையன் செர்ஜீ எழுதிய நாட்குறிப்புகளின் தொகுப்பான Sergei Tolstoy and the Doukhobors: A journey to Canada புத்தகம் வாசித்ததே
ஒரு நாவலை எழுதுவத்ற்கு எழுத்தாளனுக்கு ஏதாவது ஒரு அக்க்காரணம் இருக்க்கூடும், ஆனால் இந்த நாவலை டால்ஸ்டாய் எழுதுவற்கு இருந்த காரணம் வியப்பானது, 1898ல் பனிரெண்டாயிரம் டுகோபார்ஸ் (Dukhobors) குடும்பங்கள் ரஷ்யாவில் இருந்து அகதிகளாக வெளியேறி கனடாவில் தஞசம் புகும் நிலை ஏற்பட்டது, ரஷ்யாவில் இருந்து அந்தக்குடும்பங்கள் கப்பல் ஏறி ஆறாயிரம் மைல் தூரம் பயணம் செய்யத் தேவையான பணமும் பொருள்உதவியும் தேவைப்பட்டது, அந்த உதவியை செய்தவற்காகவே டால்ஸ்டாய் தனது ஐந்தாவது நாவலாக Resurrection எழுத முன்வந்தார், அந்நாவலுக்குக் கிடைக்கும் ராயல்டி தொகையை டுகோபார்ஸ் இயக்கத்திற்கும், அகதியாக செல்லும் மக்களின் வழிச்செலவிற்கும் பயன்பட வேண்டும் என்று விரும்பினார்
Reviews
There are no reviews yet.