ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி

ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி

பியோதர் மிக்கைலோவிச் தஸ்தயெவ்ஸ்கி, (நவம்பர் 11 1821 – பெப்ரவரி 9) பரவலாக தஸ்தயெவ்ஸ்கி என அழைக்கப்படுபவர் ஒரு உருசிய மொழி புதின எழுத்தாளரும், சிறுகதை ஆசிரியரும் கட்டுரையாளரும், பத்திரிக்கையாளரும், தத்துவவாதியும் ஆவார். 19 ஆம் நூற்றாண்டு ரஷ்யாவின் சிக்கலான அரசியல், சமூக, ஆன்மீகத் தளங்களில் மனித மனத்தின் ஆழங்களை ஆராய்பவை இவரது படைப்புகள். பல்வேறு வகையான தத்துவ ஆன்மீகப் பின்புலங்களில் இவை முன்வைக்கப்பட்டுள்ளன.

தன்னுடைய இருபதுகளில் எழுத ஆரம்பித்தவரின் முதல் நாவல் “புவர் ஃபோக்”. இக்கதை 1846ல் பிரசுரமானபோது இவரின் வயது 25. “குற்றமும் தண்டனையும்” (1866), “அசடன்” (1869), “அசுரர்கள்” (1872) மற்றும் “கரமசோவ் சகோதரர்கள்” (1880) ஆகியன இவரது முக்கிய படைப்புகள். 11 நாவல்களும் மூன்று குறுநாவல்களும் 17 சிறுகதைகளும் எழுதியுள்ள தஸ்தயேவ்ஸ்கி, நிறைய புனைவு இல்லாதவற்றையும் எழுதியுள்ளார். இலக்கிய விமர்சகர்கள் இவரை உலக இலக்கியத்தின் மிகச் சிறந்த உளவியலாளர்களில் ஒருவராகக் கூறுவதும் உண்டு[3]. இவர் 1864 எழுதிய “இருளுலகிலிருந்து நாட்குறிப்புகள்” தொடக்க கால இருத்தலியல் படைப்புகளில் ஒன்று.
நன்றி: விக்கிப்பீடியா

  • 30 October 1821
  • Male
  • 20