வலதுசாரிகளின் ‘மாடல்’ புனைவை எதிர்கொள்வதற்காக, வேறொரு புனைவை மேற்கொள்ளும் பிரச்சார உத்தியாக அல்ல.
இப்போதைய இந்திய / உலக சூழலை அறிவியல் பார்வையில் உற்று நோக்கி, நடைமுறை சாத்தியமான மாற்றினை முன்வைப்பதே ‘இடதுசாரி மாடல்’ ஆகும்.
இந்தியாவின் ஆளும் வர்க்கங்களுக்கு நேர் எதிரான கொள்கையைக் கொண்ட ஒரு கட்சி. ஒட்டுமொத்த அதிகாரத்தின் பலமுனைத் தாக்குதல்களை எதிர்கொண்டு முன்னேறுவது எப்படி சாத்தியம்? அதுவும் ‘நவதாரளமய’ விதிகளுக்கு உட்பட்டே ஆட வேண்டிய ஆட்டத்தில், இரண்டாவது முறையாக வெற்றியை தொடர முடியுமா? இவ்வாறு பல கேள்விகள் நமக்கு முன் எழுகின்றன. இந்தப் பயணம் அப்படியே தொடருமா அல்லது வங்கத்திலும், திரிபுராவிலும் எதிர்கொண்ட தடங்கல் இங்கேயும் நிகழக்கூடுமா என்ற பதட்டமும் பலரிடமும் எழுகிறது
Reviews
There are no reviews yet.