நம்முடைய திட்டம்… சாமர்த்தியம்… விதிகள் இவற்றில் இருந்து விலகி விடுபடும்போது குழந்தைகளின் படைப்பாற்றல் கட்டுடைத்து மலர்வதைக் காண்கிறேன். ஜாடியில் கற்களைப் போட்டு காக்கா தண்ணீர் குடித்த கதையை விளக்குவதற்காகப் பேத்திக்குக் கூழாங்கற்கள் பொறுக்கிக் கொடுத்தோம்.
காக்கா கதையைத் தள்ளிவிட்டு கொடுத்த கற்களோடு, மிதப்பது மூழ்குவது என்ற விஞ்ஞான விதியை விளக்க வைத்திருந்த பாட்டில் மூடிகளையும் சேர்த்துப் போட்டு சிக்கன், முட்டை எனப் பெருஞ்சமையல் செய்யத் தொடங்கி விட்டாள் பேத்தி. ஒரு சமையலில் கதையும் காலி. விஞ்ஞானமும் காலி. இருந்தபோதும் இந்த விலகல் முக்கியம். ஏனெனில் இதுதான் கற்பனையின் தொடக்கம்.
Reviews
There are no reviews yet.