கனிந்து செறிந்த மன முதிர்விலிருந்து, வழியிடையே கவித்துவம் பளீரிடும் அனாயாச சொற்தொடுப்புகளில் வந்தடைந்திருக்கின்றன இந்தக் கதைகள். ஒவ்வொன்றும் தன சகல தனித்துவத்துடனும் நம்பகத்துடனும் உணர்வுகளெல்லாம் நிரந்தரத்தில் துடித்திருக்க, அதனதன் முழுமையில் நம்முள் வாழ்கின்றன. இந்தக் கதைகள், என்னுள் சற்றே அசந்திருந்த எழுத்தின் வலிமையையும் சாத்தியங்களையும் பற்றிய வியப்பையும் மதிப்பையும் மீண்டும் ஒரு முறை உசுப்பி மலர்த்தியிருக்கின்றன. அந்தளவில் தமிழ்நதிக்கு என் நன்றி. இவை, மொழிகளிடையே கூடுபாய்ந்து மனங்களிலெல்லாம் கூடுகட்ட விழைவதாக உணர்கிறேன். – யூமா வாசுகி
Be the first to review “மாயக்குதிரை” Cancel reply
Reviews
There are no reviews yet.