இன்றைய முன்னணி புனைகதையாளர்கள் பலர் வழமைபோல கவிதையிலிருந்துதான் ஆரம்பித்தார்கள். அவர்கள் நிற்கும் புள்ளியின் தொடக்கத்தில் இன்று சமர்த்தான இளைய புனைகதையாளனாக வந்து நிற்கிறார் நரன். நூற்றாண்டைத் தொட்டு நிற்கும் தமிழ் சிறுகதைகளில் பரவலான தளங்கள் எடுத்தாளப்பட்டிருந்தாலும், இவரின் கதைக்களங்கள் இதுவரை பேசப்படாதவை. இக்கதைகளின் யுத்தியும், வெற்றியும் அதுவே. அதனால்தான் இவை அவ்வப்போது பிரசுரமானபோதே எல்லாருடைய கவனத்தையும் ஈர்த்தன, பேசவைத்தன, விவாதிக்கவைத்தன, பாராட்டவைத்தன. குறிப்பாக பல முக்கிய எழுத்தாளர்களின் பாராட்டுதல்கள்தான் நரனின் அடுத்தடுத்த சிறுகதைகளின் படிக்கட்டுகளாகின.
இந்த சிறுகதை தொகுப்பில் வரும் கதைகள் யாவும் மிக தீர்க்கமாக அகவமைத்து தனித்து நிற்கிறது. அடிமன இயல்பு காட்டக் கனவின் தன்மையொத்த தொடர்பிணைவுக் காட்சிகளை ஒட்டுமொத்த கதாப்பாத்திரங்களினூடே ஒரு செம்மையானப் பதிவு “கேசம்”. உங்களை பிரமிக்க , வியக்க , திகைக்கவைக்கும். மிக மிக முக்கியம்மனை சிறுகதை தொகுப்பு, இன்னும் வர ஆண்டுகளில் ஆகச் சிறந்த படைப்பாக கருதப்படும். அவசியம் வாசிக்க வேண்டிய சிறுகதை தொகுப்பு !
Reviews
There are no reviews yet.