கோபிகிருஷ்ணன்

கோபிகிருஷ்ணன்

கோபிகிருஷ்ணன் எழுத்துகளின் முழுமையான தொகுப்பு, 2012-ல் ‘கோபிகிருஷ்ணன் படைப்புகள்’ என்ற தலைப்பில் ‘நற்றிணை’ பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. அதன் தொகுப்பாளராக நான் பணியாற்றினேன். இதன்மூலம் அவருடைய எல்லா எழுத்துகளையும் ஒருசேர வாசிக்கும் வாய்ப்பு அமைந்தது. கோபிகிருஷ்ணனின் படைப்பாக்க காலம் என்பது 1983 இறுதியிலிருந்து அவருடைய மரணம் வரையான (2003) இருபது ஆண்டுகள். அவருடைய எழுத்துகள் சிறுகதைகள், குறுநாவல்கள், பதிவுகள், கட்டுரைகள், கவிதைகள், நேர்காணல் என ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு அத்தொகுப்பு வெளியானது. நவீனத் தமிழிலக்கியத்தில் கோபிகிருஷ்ணனின் முக்கியத்துவம் என்பது மனப்பிறழ்வு மனிதர்களின் குரலையும் அவர்களுடைய பித்துமொழியையும் அபூர்வ நடத்தைகளையும் அபாரமாகப் பதிவுசெய்ததில்தான் மகத்துவம் பெற்றிருக்கிறது. ஒரு படைப்பாளி, படைப்பாக்கத்தின்போது எய்தும் பித்துநிலையில் வெளிப்படும் பித்துமொழி என்பது வேறு; மனச் சிதைவுக்குள்ளாகிய மனிதர்களின் வெளிப்பாட்டு மொழி தன்னியல்பாகக் கொண்டிருக்கும் பித்துமொழி என்பது வேறு. இவ்விரு தன்மைகளையும் கோபியின் எழுத்துகளில் நாம் சாதாரணமாகக் காணலாம். (சி.மோகன்)
~நன்றி: இந்து தமிழ் திசை

  • 23 August 1945
  • Male
  • 1