
தமிழ்நதி
சமகாலத்தில், ஈழ மக்களின் முறியடிக்கப்பட்ட விடுதலைப் போராட்டம் தொடர்பான பதிவுகளை அரசியலின் வெப்பம் குறையாமலும், கலையம்சத்தின் அழகியலைக் கைவிட்டுவிடாமலும் நேர்த்தியாக எழுதுவதில், தனித்துத் தெரிகிறார் தமிழ்நதி.
நன்றி: விகடன்
கலைவாணி என்ற இயற்பெயர் கொண்ட தமிழ்நதி, ஈழத்தின் திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஈழத்து தமிழ் பெண்எழுத்தாளர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் பட்டம் பெற்றவர். ஈழத்தின் அரசியல் சிக்கல் காரணமாக 1992இல் கனடாவுக்குப் புலம்பெயர்ந்தார். 1996ஆம் ஆண்டிலிருந்து சிறுகதை, கவிதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார். சில பாடல்களும் எழுதியுள்ளார். ஓரிடத்தில் தரியாது, ரொறன்ரோ-தமிழகம்-ஈழம் என மூன்று இடங்களிலும் விரும்பி வாழ்ந்து வருகிறார்.
நன்றி: விக்கிப்பீடியா
- திருகோணமலை
- Female
- 4