இனி நான் உறங்கட்டும் மலையாள எழுத்தாளர் பி. கெ. பாலகிருஷ்ணன் எழுதிய நாவல். மலையாளத்தில் ”இனி ஞான் உறங்ஙட்டே?” என்ற தலைப்பில் வெளியான இதை, ஆ.மாதவன் தமிழாக்கம் செய்துள்ளார். இதனை சாகித்ய அகாதமி வெளியிட்டிருக்கிறது. இது காவியச்சுவை கொண்ட துயரமான படைப்பு இது.
இந்நாவல் 1978 ல் வயலார் விருது பெற்றது. இது மகாபாரத நாவல். கர்ணனை மையக் கதாபாத்திரமாகக் கொண்டது. கர்ணன் எல்லா திறமைகள் இருந்தும் விதியால் தோற்கடிக்கப்பட்டவன். அந்த விதி அவனுடைய நற்பண்புகளையே பயன்படுத்திக்கொண்டது. கர்ணன் மேல் பாஞ்சாலிக்கு காதல் இருந்தது. கர்ணனைப்பற்றி பாஞ்சாலியின் நினைவாக விரியும் இந்நாவல் அவள் போர் முடிந்தபின் இனிமேலாவது நான் தூங்குகிறேனே என தனக்குத்தானே சொல்லிக்கொள்ளும் இடத்தில் முடிகிறது
~ நன்றி: விக்கிப்பீடியா
Reviews
There are no reviews yet.