பி. கே. பாலகிருஷ்ணன்

பி. கே. பாலகிருஷ்ணன்

கோவில்பட்டி அருகே எடவனக்காடு என்ற ஊரில் ஒரு ஈழவக் குடும்பத்தில் பணிக்கச்சேரி கேசவ ஆசானுக்கும் மணியம்மைக்கும் மகனாக பிறந்தார். செறாயி என்ற சிறுநகரில் கல்விகற்றார். எர்ணாகுளம் மகாராஜா கல்லூரியில் அறிவியலில் பட்டம் பெற்றார். படிப்பு நடந்துகொண்டிருக்கும்போது வெள்ளையனே வெளியேறு இயக்கம் சூடு பிடிக்கவே அதில் ஈடுபட்டு சிறைசென்றார். அத்துடன் படிப்பு நின்றது. அரசியல் ஆரம்பித்தது.

சிறையில் இருந்து வெளிவந்தபின் காங்கிரஸின் முழு நெர ஊழியராக இருந்தார். நாராயணகுருவின் இயக்கத்தில் ஆர்வம் கொண்டார். நாராயணகுருவின் மாணவரும் சமூகசீர்திருத்தவாதியும் நாத்திக இயக்க முன்னோடியுமான சகோதரன் அய்யப்பனின் நெருக்கமான மாணவராக ஆனார். காங்கிரஸில் இருந்து கேரள சோஷலிஸ்ட் கட்சிக்குச் சென்று முழுநேர ஊழியராக பணியாற்றினார். காங்கிரஸ் நடத்திய ஆஸாத் என்ற நாலிதழின் உதவி ஆசிரியராக பணியாற்றி இதழியல் அனுபவம் பெற்ற பாலகிருஷ்ணன் எல்லா கட்சிகளிலும் இதழியலையே தன் களமாக கொண்டிருந்தார். கேரள பூஷணம் இதழிலும் பின்னர் கேரள கௌமுதி இதழிலும் ஆசிரியராக நெடுங்காலம் பணியாற்றினார். இக்காலகட்டத்தில் முக்கியமான நூல்களை எழுதினார்.
நன்றி: விக்கிப்பீடியா

  • 2 March 1925
  • Male
  • 2