அண்மையில் நான் படித்த நூல் சமஸ் எழுதியுள்ள யாருடைய எலிகள் நாம்? மற்ற நூல்களைப் படிப்பதற்கும் இந்நூலைப் படிப்பதற்கும் பெரிய வேறுபாடு உண்டு. ஒரு குறிப்பிட்ட பொருண்மையில் உள்ள நூல் ஒரே நிலையில் ஒரே தடத்தில் வாசகரை அழைத்துச்செல்லும். ஆனால் பல்வேறு பொருண்மைகளைக் கொண்டு அமைந்துள்ள இந்நூலில் ஒட்டுமொத்த தமிழக, இந்திய, சர்வதேச அரசியல் தொடங்கி அன்றாட பிரச்னை வரை விவாதிக்கப்பட்டுள்ளது. தலைப்பைப் படித்ததுமே வாசகர்கள் நிமிர்ந்து உட்காருவர். பின்னர் சிந்திக்க ஆரம்பிப்பர். படிக்கும் நம்மை களத்திற்கே அழைத்துச் சென்று விடுகிறார் நூலாசிரியர். சுமார் 400 பக்கங்கள் கொண்ட இந்நூலில் விடுபட்டது என்று கூறமுடியாத அளவு அனைத்தும் விவாதிக்கப்பட்டுள்ளன. நூலைப் படிக்கும்போது கட்டுரைகளைத் தேர்ந்தெடுக்க ஆசிரியர் எதிர்கொண்ட சிரமத்தை உணரமுடிகிறது.
யாருடைய எலிகள் நாம்?
Brand :
- Edition: 1
- Published On: 2023
- Format: Paper Cover
Categories: அரசியல் & சமூக அறிவியல், கட்டுரைகள்
subject: POLITICS
Author:சமஸ்
Be the first to review “யாருடைய எலிகள் நாம்?” Cancel reply
Reviews
There are no reviews yet.