காந்தியையும் அம்பேத்கரையும் எதிர்நிலைகளாகப் பாவித்து இந்தியாவில் தொடங்கப்பட்ட தலித் இயக்கத்தின் போக்கை உலகமயமாக்கல் திட்டங்கள் தொடங்கியதன் பின்னணியில் டி.ஆர். நாகராஜ், தீப்பற்றிய பாதங்கள் புத்தகத்தில் பேசுகிறார். வளர்ச்சி அரசியல் என்ற தர்க்கத்தை இந்திய நடுத்தர வர்க்கத்தினரும் அரசுகளும் வேகமாக முன்னெடுத்த சூழ்நிலையில் தலித் மக்களுக்கும், தலித் மக்களை அங்ககமாகக் கொண்டிருக்கும் கிராமிய சமூகப் பொருளாதாரத்திற்கும் ஏற்படும் நெருக்கடிகளையும் அபாயங்களாக முன் உணர்கிறார். சாதியப் படிநிலையையே ஆதாரமாக கொண்ட இந்தியக் கிராமத்தை தீண்டாமையின் தொட்டில் என்று கூறி அம்பேத்கர் வெறுத்து ஒதுக்குகிறார். அம்பேத்கர் இத்தீர்மானத்துக்கு வருவதற்கான நியாயத்தை ஏற்றுக்கொள்ளும் டி.ஆர்.நாகராஜ், உலகமயமாக்கல் மற்றும் மேம்பாட்டுத் தொழில்நுட்பங்கள் காரணமாக கிராமியப் பொருளாதாரத்திற்கு ஏற்படும் சீர்குலைவு தலித் மக்களின் வாழ்வாதாரத்தைத்தான் முதலில் பாதிக்கும் என்கிறார். இந்தப் புள்ளியில்தான் காந்தியை நோக்கி அவரது சுயராஜ்ஜிய கருத்துகளில் அம்பேத்கரின் இடைவெளிகளை நிரப்பும் சாத்தியத்தை நோக்கி நகர்கிறார். நவீனத்துவம் மீதான ஒருவகை சலிப்பை அம்பேத்கர் பிற்காலத்தில் உணர்வதையும் பௌத்தத்தை நோக்கியும் உருவகக்கதைகளையும் நோக்கி நகர்ந்ததையும் சுட்டிக்காட்டுகிறார். இதை அறிவுசார் மறுபிறப்பு என்கிறார் டி.ஆர்.நாகராஜ். ஆனால் தனது மறுபிறப்புக்கான காரணங்களை அந்தப் புதிய புத்தபிட்சு விளக்குவதற்குள் காலம் அவரை நம்மிடமிருந்து பறித்துவிட்டதாக சங்கடப்படுகிறார்.
தீப்பற்றிய பாதங்கள் (தலித் இயக்கம்-பண்பாட்டு நினைவு-அரசியல் வன்முறை )
Brand :
- சீனிவாச ராமாநுஜம் (தமிழில்)
- ஏதிர் வெளியீட்டு பதிப்பு: July 2021
- Pages: 330
- ISBN: 978-93-90811-37-3
- Format: Hard Bound
Be the first to review “தீப்பற்றிய பாதங்கள் (தலித் இயக்கம்-பண்பாட்டு நினைவு-அரசியல் வன்முறை )” Cancel reply
Reviews
There are no reviews yet.