விடுதலைக்கு முந்தைய சிறுகதைகள் இந்த புத்தகத்தின் உள்ளடக்கமாக தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் முதல் பகுதியில் உள்ளன. இந்த சிறுகதைகளின் முகப்பில் அந்த சிறுகதை எந்த இதழில் வெளிவந்தது, வெளிவந்த ஆண்டு, இதழின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறுகதை இதழில் வெளிவந்தது போல அதன் முகப்புப் பக்கம் கொடுத்திருப்பது நம்மை அந்த காலகட்டத்திற்கு அழைத்துச் செல்கிறது. இரண்டாவதாக “கதைகளின் கதை” பகுதி அமைந்துள்ளது. இதில் அந்தக் கதை வெளிவந்த இதழ் பற்றிய வரலாறு, எழுத்தாளர் பற்றிய குறிப்புகள் மிக நேர்த்தியாக தொகுக்கப்பட்டுள்ளன. எழுத்தாளர்களுடைய புகைப்படங்கள், இதழ்களின் முகப்புப் புகைப்படங்கள் மேலும் ஆழமான சித்திரத்தை அளிக்கிறது. புத்தகத்தை ஆரம்பிக்கும் போது வலையின் கண்ணியின் முனையில் நின்று கொண்டிருப்பது போன்று தோன்றினால் வாசித்து முடிக்கும் போது ஒரு கண்ணிவலையின் முந்நூற்றியருபது டிகிரி கோணத்தை வாசகனால் கண்டடைய முடியும். அங்கிருந்து அவன் மேலும் விரித்துச் செல்வதற்கான சாத்தியமுள்ளது.
~நன்றி: ஜெயமோகன்
Reviews
There are no reviews yet.