இறுதியாக ஒரு துப்பாக்கிச்சூடு நிகழும் வரை நாம் அனுமதிக்கப்பட்டிருக்கிறோம். குறையாத இடைவெளியில் புல்லட்டுகள் ஒவ்வொன்றும் மற்றொன்றை முடிவில்லாமல் துரத்துகின்றன.நான்காவது புல்லட் என் நெற்றியின் வலது ஓரத்திலிருந்தி கிளம்பி,வெற்று வெளியில் மற்ற புல்லட்டுகளைத் துரத்துகிறது.அது நெற்றியின் இடது வெளிபுறத்திலிருந்து ஓட்டைப் பிளக்கும் கோழிக்குஞ்சாய் தலை நீட்டியது வரை ஒரு நெடிங்காலப் பயணத்தை மின்னல் வேகத்தில் முடித்ததை மட்டுமே என்னால் நினைவு கூர முடிகிறது.
~ பாலசுப்ரமணியன் பொன்ராஜ்
Reviews
There are no reviews yet.