1 மதினிமார்கள் கதை (சிறுகதைத்தொகுப்பு, 1986)
2 கொல்லனின் ஆறு பெண் மக்கள் (சிறுகதைத்தொகுப்பு, 1989)
3 பொம்மைகள் உடைபடும் நகரம் (சிறுகதைத்தொகுப்பு, 1992)
4 பட்டுப்பூச்சிகள் உறங்கும் மூன்றாம் ஜாமம் (சிறுகதைத்தொகுப்பு, 1994)
5 உப்புக்கத்தியில் மறையும் சிறுத்தை (சிறுகதைத்தொகுப்பு, 1997)
சலூன் நாற்காலியின் சுழன்றபடி (சிறுகதைத் தொகுப்பு, 2008) – மேற்கண்ட முதல் ஐந்து நூல்களில் உள்ள சிறுகதைகள் யாவும் அடங்கியது.
‘சிறுகதை என்பது முள்ளெலிகள் வட்டமாய் உருண்டுவரும் உறக்கம். ஏனெனில், இத்தொகுப்பில் இடம்பெறும் கதைகளில், தூங்கேணியில் வரும் விதவித மீன்கள் அதிகதைகளை ஊர் ஆவிகளிடம் கேட்டுச் சொல்கின்றன. நீரின் தேசல் ஒளியில் எழுத்துப்பூச்சிகள், சதா தேவதைக் கதைகளை இந்த நூலுக்குள் கொண்டுவந்து திறக்கின்றன; நத்தைகளின் உணர்கொம்புகள் அசைந்து அசைந்து கதைபோடத் துவங்குகின்றன – உங்களுக்காக. கூடுசாலையில் இருக்கும் லாந்தக்கல் அருகில், அந்தக் கண்ணாடி போட்ட விளக்கிடம் சலூன் நாற்காலியில் சுழன்றபடி, காட்டு மனிதர்கள் வனமந்திரக் கதைகளைக் கேட்டுப் போகிறார்கள். இதனால் மஞ்சணத்திப் பூவின் மணம், பாம்புகளைக் கிறங்கச் செய்த ஏடன் தோட்டத்தின் வரைபடமாக, இத்தொகுப்பின் கதைகள் விரிகின்றன. அத்துடன் மணல் வெளி சிவப்பேறி, பேசிய வேகத்தில் நம் மனதைப் பற்றிவிடும் இக்கதைகள், கட்புலனுக்கும் அகப்படாத அரிதுயில் நிலையில் இருக்கும் , உட்பொருள்களைச் செங்காற்றின் துயரமாய் வீசுகின்றன. ஆகவே, இந்நூலில் வறண்ட செம்மேடுகளாய் மேலேறி வரும் சூரங்குடி, அங்கு ஆளைத் தள்ளி, உருட்டி எழும் காற்றின் இருப்பைக் கதைகளால் வாசியுங்கள், பிறகு செழிப்பாய்க் கிடக்கும் தூரதூர ஊர்களுக்கும் அவை ‘உங்களைத் தாமாகவே கூட்டிப் போவது உறுதி. – கோணங்கி
நன்றி: www.goodreads.com
Reviews
There are no reviews yet.