ஹெகலிய, ஃபாயர்பாக்கிய கருத்துப் போக்குகளின் சிதைவிலிருந்து உருவான பல்வேறு போக்குகளில், புரட்சிகரமான கருத்துப் போக்கு ‘மார்க்சியம்’ என்பதை இந்த நூலில் எங்கெல்ஸ் நிலைநாட்டுகிறார். இக்கருத்துப் போக்குக்குத் தானும் குறிப்பிட்ட பங்கை அளித்துள்ள போதிலும் அது ‘மார்க்சியம்’ என்று மார்க்சின் பெயராலேயே அழைக்கப்பட வேண்டும் என்பதற்கான காரணத்தையும் எங்கெல்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
சுருங்கக் கூறின், இந்த நூல் மார்க்சிய உலகக் கண்ணோட்டம் எப்படி வளர்ச்சியடைந்தது. அதன் முக்கியமான கூறுகள் எவை என்பதை விளக்குகிறது; இயக்கவியல் பொருள்முதல்வாதம், வரலாற்றுப் பொருள்முதல்வாதம் ஆகியவற்றின் அடிப்படைகளை முறைப்படியாக விளக்கும் ஒரு பாட நூலாகவே விளங்குகிறது.
Reviews
There are no reviews yet.