ஒரு நூற்றாண்டின் தொடக்கத்தில் நின்றபடி, ஒரு நூற்றாண்டு முடிவின் கனவு கலையும் மயக்கச் சித்திரத்தை வரைந்து காட்டுகிறது சாம்ராஜின் முதல் நாவல். ஒரு காலகட்டத்தின் எரிபொருளாய் கனன்ற சித்தாந்தத்தின் நிழலில், சிச்சிறு குழுக்களாய்ச் சிதறிப்போய் இயங்கிக்கொண்டிருந்த தீவிர அமைப்புகளின் செயல்பாடுகளும் நிலைப்பாடுகளும் விமர்சிக்கப்படுகின்றன இதில் அங்கதமும் கேலியுமாய். பின்புலத்தில், தன் அத்தனை விளக்குகள் வாசனைகளுடன் சந்தடி இரைச்சலுடன் உள்ளும் புறமுமாய் ஓடுவது மதுரை மாநகர். காலத்தின் புழுதி மிதக்கும் அதன் வீதிகளில் இருந்து பாத்திரங்களும் கதைகளும், ஜனரஞ்சகத்தின் பாடல்களும் சாம்ராஜின் துடிப்பும் துடுக்கும் கூடிய மொழிநடையில் கிளைத்துப் பெருகி நிறைகின்றன. துயரும் ஏமாற்றங்களும் கைத்த அபத்தங்களாகத் தோற்றங்கொள்ளும் இப்புனைவில், மையச்சரடாய் விரிகிறது சொல்லப்படாதவொரு விசித்திர காதல்கதை. கூடவே, மேன்மையான கற்பனைகளில் இருந்தும் ஒளிவீசும் நம்பிக்கைகளில் இருந்தும் நிர்த்தாட்சண்யமாய் தரையிறக்கப்பட்டு, ஊர் ஊராக இழுத்துச் செல்லப்படும், லட்சியங்களின் கெடுதேதிக் காலங்களில் ’வயதுக்கு வரும்’ ஓர் இளைஞனின் கதையும்…
-கவிஞர் சபரிநாதன்
Reviews
There are no reviews yet.