கவிஞர். எழுத்தாளர். திரைக்கதை ஆசிரியர். குழந்தைகளுக்கான கனவுலகத்தைப் படைப்பதில் எப்போதும் பெரு விருப்பம் உள்ளவர். ஆகச்சிறந்த, பெண்ணியத்திற்கு வித்திட்ட பெரியார் அவர்களே பெண்களுக்குத்தான் அறிவுரை கூறுகிறார். பெண்களை கர்ப்பப்பையை வெட்டி எடுத்துவிடச் சொல்கிறார். முடியை ‘க்ராப்’ வைத்துக்கொள்ளச் சொல்கிறார். ஆண்களுக்கென்று அவர் எதையும் சொல்லவில்லை. அவர்களை எதையும் மாற்ற நிர்பந்திக்கவில்லை’ என்று குறிப்பிடுகிறார் பிருந்தா சேது. அவர் முன்வைக்கும் கேள்வியின் நியாயமும் புரிகிறது. பெண்கள், குழந்தைகள் தொடர்பாக எல்லோருக்கும் ஒரு புரிதலைத் தருகிற. முக்கியமாக ஆண்களுக்குப் புரிதலைத் தருகிற கட்டுரைகள் இவை. கீழோர் மேலோர் இல்லை – Men and Women are not similar but are equal உண்மையான அறிவு. அதை நோக்கிய முக்கியமான முயற்சியே இக்கட்டுரைத் தொகுப்பு. ‘பெண்கள் மனநிலையைப் புரிந்து கொள்ளவில்லை. நாங்கள் இப்படியே பழக்கப்பட்டு விட்டோம்’ என ஆண்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. அந்தப் பார்வையை மாற்ற வேண்டும். பெண்களுக்கெதிரான பல்வேறு குற்றங்களுக்கும் பின்னால் இந்த மனநிலை இருக்கிறது. அதை மாற்றுவதற்காகவே இந்தக் கட்டுரை தொகுப்பினை உருவாக்கியுள்ளார் பிருந்தா சேது. ஆங்காங்கே தெறிக்கும் மேற்கோள்கள், குட்டிக்கதைகள், சரளமான மொழிநடை ஆகியவை வாசிக்கும் சுவாரஸ்யத்தைக் குறையவிடாமல் பார்த்துக் கொள்கின்றன.
கேளடா மானிடவா குழந்தை வளர்ப்பும் பெற்றோரும்
Brand :
- Edition: 1
- Published On: 2022
- ISBN: 9788195650507
- Format: Paper Cover
Category: கட்டுரைகள்
subject: FEMINISM
Author:பிருந்தா சேது
Be the first to review “கேளடா மானிடவா குழந்தை வளர்ப்பும் பெற்றோரும்” Cancel reply
Reviews
There are no reviews yet.