இந்த நூல், காரைக்கால் அம்மையார் தொன்மத்தின் இரண்டு முதன்மையான கருத்துக்களைச் சமூக மானுடவியல் அணுகுமுறையில் ஆராய்ந்துள்ளது. ஒன்று, காரைக்கால் அம்மையார் கொண்ட பேய் உடம்பு என்பது இறப்பிற்குப் பிந்தைய ஆவிநிலையாகவும் அச்சம் தரத்தக்கதாகவும் அதீத ஆற்றலால் தீங்கு இழைப்பவர் என்பதாகவும் பிற்காலத்தவர் கொண்ட நம்பிக்கையை இந்நூல் மறுத்துள்ளது. மாறாக, காரைக்கால் அம்மையார் கொண்ட பேய்மகள் வடிவமானது புராதனத் தாய்வழிச் சமூக அமைப்பில் புனித வடிவமாகப் போற்றப்பட்டுள்ளது. மானுட வாழ்க்கையின் மேம்பட்ட நிலை அது. வழிபாட்டிற்குரிய பேய்மகளிர், பேரன்னை வழிப்பாட்டை நடத்தும் பூசாரிகள் ஆவார். இவர்கள் இறை ஆற்றலும் இயற்கையை ஏவல் கொள்ளும் ஆற்றலும் நிரம்பியவராகக் கருதப்பட்டனர். மிகப் பழைய உலக நாகரிக இனங்களில் இத்தகு பேய்மகளிரை அடையாளம் காணமுடியும். இதனை விளக்குகிறது இந்நூல் இரண்டாவதாக, தமிழரின் உணவுப் பண்பாட்டில் கணவன் இல்லாமல் மனைவி தனியே விருந்தினரை வரவேற்று உணவு படைக்கும் நிலை இல்லை. ஆனால் இந்த வழக்கத்தைக் காரைக்கால் அம்மையார் புறந்தள்ளியுள்ளார். இதற்கான காரணத்தையும் ஆராய்கிறது இந்நூல்.
காரைக்கால் அம்மையார் தொன்மம் சமூக மானுடவியல் ஆய்வு
Brand :
- Edition: 01
- Published On: 2023
- ISBN: 9788119034208
- Pages: –
- Format: Paper Cover
Be the first to review “காரைக்கால் அம்மையார் தொன்மம் சமூக மானுடவியல் ஆய்வு” Cancel reply
Reviews
There are no reviews yet.