வில்லாளிக்கு அம்பு எத்தன்மைத்ததோ, அத்தன்மைத்தது புலவனுக்கு, எழுத்தாளனுக்கு சொல். சேமிப்பில் சொற்பண்டாரம் இன்றி எழுதப் புகுபவன், கையில் கருவிகளற்றுத் தொழிலுக்குப் போகிறவன். தச்சனோ, கொல்லனோ, குயவனோ, நாவிதனோ, உழவனோ எவராயினும் அது பொருந்தும். அரைகுறையாகக் கருவிகளைச் சுமந்து செல்கிறவன், துல்லியமற்ற, பொருத்தமற்ற கருவிகளைச் சுமந்து செல்கிறவன், திறம்படத் தொழில் செய்ய ஏலாது.
தனித்தமிழ் என்று கடும்’பிடித்தம்’ பிடிக்கிறவர்கள் தேவநேயன் எனும் மொழிஞாயிறின் பெயரை வசதியாக மறந்து போய்விடுவார்கள். பயபக்தியோடு Stalin என்று உச்சரிப்பார்கள். ஆனால் இசுடாலின் என்று எழுதுவார்கள். இசுடாலின் என்று எவரும் பேசிக்கேட்டது உண்டா?
மொழி என்பது எவரின் கையடக்கப் பதிப்பு அல்ல.
எனக்குள் எழும் சில ஐயப்பாடுகள், சில சொல்லாக்கங்களை ஏன் தமிழன் ஏற்றுக்கொள்கிறான்? வேறு சிலவற்றை ஏன் நிராகரிக்கிறான்? தொல்காப்பியர் தரும் சுதந்திரத்திற்கும் தனித்தமிழ்வாதிகள் கட்டும் வேலி வரம்புக்கும் இடையிலான நட்பென்ன, முரண் என்ன? ஆப்பிள், சைக்கிள், சிமெண்ட் போன்ற சொற்களை தமிழ்மொழி எத்தனை நூற்றாண்டுகள் இனிக் கையாளும்? அல்லது என்றேனும் நிராகரிக்குமா?
நன்றி: nanjilnadan.com | solvanam.comவில்லாளிக்கு அம்பு எத்தன்மைத்ததோ, அத்தன்மைத்தது புலவனுக்கு, எழுத்தாளனுக்கு சொல். சேமிப்பில் சொற்பண்டாரம் இன்றி எழுதப் புகுபவன், கையில் கருவிகளற்றுத் தொழிலுக்குப் போகிறவன். தச்சனோ, கொல்லனோ, குயவனோ, நாவிதனோ, உழவனோ எவராயினும் அது பொருந்தும். அரைகுறையாகக் கருவிகளைச் சுமந்து செல்கிறவன், துல்லியமற்ற, பொருத்தமற்ற கருவிகளைச் சுமந்து செல்கிறவன், திறம்படத் தொழில் செய்ய ஏலாது.
தனித்தமிழ் என்று கடும்’பிடித்தம்’ பிடிக்கிறவர்கள் தேவநேயன் எனும் மொழிஞாயிறின் பெயரை வசதியாக மறந்து போய்விடுவார்கள். பயபக்தியோடு Stalin என்று உச்சரிப்பார்கள். ஆனால் இசுடாலின் என்று எழுதுவார்கள். இசுடாலின் என்று எவரும் பேசிக்கேட்டது உண்டா?
மொழி என்பது எவரின் கையடக்கப் பதிப்பு அல்ல.
எனக்குள் எழும் சில ஐயப்பாடுகள், சில சொல்லாக்கங்களை ஏன் தமிழன் ஏற்றுக்கொள்கிறான்? வேறு சிலவற்றை ஏன் நிராகரிக்கிறான்? தொல்காப்பியர் தரும் சுதந்திரத்திற்கும் தனித்தமிழ்வாதிகள் கட்டும் வேலி வரம்புக்கும் இடையிலான நட்பென்ன, முரண் என்ன? ஆப்பிள், சைக்கிள், சிமெண்ட் போன்ற சொற்களை தமிழ்மொழி எத்தனை நூற்றாண்டுகள் இனிக் கையாளும்? அல்லது என்றேனும் நிராகரிக்குமா?
நன்றி: nanjilnadan.com | solvanam.com
Reviews
There are no reviews yet.