அம்பேத்கரின் கடைசி எட்டு ஆண்டு கால வாழ்க்கையின் மிக நெருக்கமான, உயிர்ப்புள்ள, நேரடியான பதிவு இது. விலைமதிப்பற்ற முதன்மையான ஆதாரம். ~ராமச்சந்திர குஹா.
‘நான் மிகவும் பலவீனமானவன். மிகவும் கனிவானவன். எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவன். மக்கள் என்னைப் பற்றித் தவறான அபிப்ராயம் கொண்டிருக்கிறார்கள். நான் கல்நெஞ்சக்காரன், முரட்டுத்தனமானவன், வெளிப்படையானவன், உணர்ச்சியற்றவன், வாதம்புரிபவன், முழுக்க மண்டைதானே தவிர இதயமே கிடையாது என்றெல்லாம் அவர்கள் நினைக்கிறார்கள். எனக்குள் கனிவும் மென்மையும் இருக்கின்றன. என்னை அவை பலவீனப்படுத்துகின்றன, சரணடையவைக்கின்றன.’ இந்தப் புத்தகத்தில் வெளிப்படும் அம்பேத்கர் இப்படியானவர்தான். இதுவரை நாம் பார்த்தறிந்திராத பக்கம் அது.
Reviews
There are no reviews yet.