“நம்மைப் பிரித்து முட்டவிடும் கைகள் நீண்டு.. நீண்டு நெருங்கி வருகின்றன- நம் சாதி, நம் மதம், நம் தேசம் என்ற போதை தரும் கூச்சல்களுடன்!
அரவணைக்கும் கைகள் வேண்டும்.. பன்மையைப் புரிந்துகொண்டு அரவணைக்கும் கைகள்!
கல்விக்கூடங்களில் இருந்துதான் அவை புறப்பட வேண்டும்.”
“கடந்த 5 ஆண்டுகளில் மட்டுமே 330 மலக்குழி மரணங்கள் இந்தியாவில் நிகழ்ந்திருக்கின்றன. இவற்றை ‘விபத்துகள்’ என்று சொல்லித் தப்பிக்கப் பார்ப்போம்.
அது சரி! பொய்யும் அலங்காரமும் நிறைந்த நம் வார்த்தைகளா முக்கியம்?
ஒடுக்கப்பட்டோரின் குரலும் வார்த்தைகளும் முக்கியம்.
விம்மும் குரல்கள்!
வெடித்துச் சிதறும் வார்த்தைகள்!“
Reviews
There are no reviews yet.