ஒரு படைப்பைத் தீவிரமான வாசகன் ஒருவன் அணுகும் முறை நம்மால் நினைத்துப்பார்க்கவே இயலாதது. ஏனெனில் அவன் ஒரு புத்தகத்தை மொழியாக வாசிப்பதோடு, அர்த்தங்களாகவும் வாசிக்கின்றான். இவ்விரண்டும் இருவேறு வகை என்றளவில்தான் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால் இரண்டளவிலும் நின்று பேசும் படைப்புகள் சில உள்ளன. ஆகவே அதுபோலான அசாத்தியமான ஒரு படைப்பைத் தமிழ்ப்படுத்துவதில் எப்போதும் சிக்கல்களுண்டு. Detail study/Meaning Study என்ற வகையைப் பொறுத்து மொழிபெயர்ப்பில் எத்தகு திறனுடையவர்களாலும் நிறைவாகச் செய்ய முடியாத படைப்புகளும் இருக்கத்தான் செய்கின்றன. அவ்வகையில் எப்படியேனும் கண்டறிந்துவிடும் பிழைகளையெல்லாம் (?) ஒதுக்கிவைத்துவிட்டுப் பார்த்தால், இது மிக முக்கியமான வெளியீடு. தமிழில் அதிகபட்ச உழைப்பில் தருவிக்கப்பட்டுள்ளது என்பதை நாவலைப் படிக்கையில் புரிந்துகொள்வீர்கள். மொழிபெயர்ப்பாளருக்கு என் வாழ்த்துகள்!
கசார்களின் அகராதி (ஆண் பிரதி மற்றும் பெண் பிரதி)
Brand :
- Edition: 1
- Year: December 2021
- Weight: 1000 g
- Format: Hardcover
Categories: புதினம், மொழிபெயர்ப்புகள்
subject: TRANSLATION
Author:மிலோராத் பாவிச்ஸ்ரீதர் ரங்கராஜ்
Be the first to review “கசார்களின் அகராதி (ஆண் பிரதி மற்றும் பெண் பிரதி)” Cancel reply
Reviews
There are no reviews yet.