காந்தியையும் காந்தியத்தையும் மார்க்ஸிய, அம்பேத்கரிய, பெண்ணிய அடிப்படையிலான பன்மை நவீனத்துவத் தளத்தில் நுண் பகுப்பாய்வு செய்கிறது இந்நூல். தனி மனிதராகவும் அரசியல் செயற்பாட்டாளராகவும் வெவ்வேறு காலகட்டங்களில் தன்னுள் நிகழ்ந்த மாற்றங்கள் குறித்து அவர் கொண்டிருந்த வெளிப்படைத் தன்மையையும் விவாதிக்கிறது.
நவீன அரசியல், நவீனத் தொழில்நுட்பங்கள், நவீன சமூக நிறுவனங்கள் பற்றிய காந்திய அறம் சார்ந்த அணுகுமுறை மற்றும் ஆன்மீக, சமூக, அரசியல் நோக்கில் காந்தி ‘விடுதலை’குறித்துக் கொண்டிருந்த புரிதல், அவரது இயங்குதளம் மதத்தை அடிப்படையாகக் கொண்டிருந்ததின் முரண், ‘மகாத்மா’ என்னும் தெய்வ நிலையை நிலைகுலையச் செய்யும் விதமாக அவரது மகன் எடுத்திருந்த எதிர் நிலைப்பாடு ஆகியவை குறித்து இந்நூல் விரிவாகப் பேசுகிறது.
உலகில் இதுவரை தோன்றிய கோட்பாடுகள், தத்துவங்கள் யாவுமே மானுடச் சிக்கல்களை முழுமையாகத் தீர்க்கவியலாத போதாமையுடன் இருப்பதையும் மாற்று அரசியல் குறித்த சிந்தனையில் காந்தியம் தவிர்க்க இயலாததாக ஆகியிருப்பதையும் சமீபகால யுத்த, அரசியல், பொருளாதார நடவடிக்கைகளை உதாரணங்காட்டி முன்வைக்கிறது இந்நூல்.
Reviews
There are no reviews yet.