இந்தியாவின் முதல் நகராட்சி சென்னை நகராட்சிதான். சென்னை- இந்தியாவின் நான்காவது பெரிய நகரம். சினிமா, அரசியல், தொழில், வணிகம் என பன்முகத்தின் மையம். பாரம்பரிய சின்னங்கள் அதிகமுள்ள இடம் சென்னை. இப்படி சென்னையின் சிறப்புகளை சொல்லிக் கொண்டே போகலாம்.
ஒரு மாநகரத்தின் வளர்ச்சி என்பது அங்குள்ள மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதாகும். அவர்களின் அடிப்படை தேவைகள், வசதிகள் பூர்த்தி செய்யப்படுவதாகும். அப்படி சென்னைவாசிகளின் அடிப்படை தேவைகள், வசதிகள் பூர்த்தி செய்யப்படவில்லை என்று ‘‘சென்னையின் மறுபக்கம் – நிஜங்களின் தரிசனம்’’ என்ற இந்த புத்தகத்தில் படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளது.
குடியிருப்பு, சாலை, சுகாதாரம், மருத்துவம், வாழ்வாதாரம், தனியார் மய பிரச்னைகள் என்று சென்னை நகரவாசிகளின் பல்வேறு பிரச்னைகள் இந்த புத்தகத்தில் அலசி ஆராயப்பட்டிருக்கிறது. அதோடு பிரச்னைகளுக்கான தீர்வும் சொல்லப்பட்டிருக்கிறது.
Reviews
There are no reviews yet.