காவல் துறை என்ற சிஸ்டத்தின் ஒவ்வொரு அணுவும் இன்று செயல்படும் விதம் நாம் அறிந்ததே. அதை அப்படியே மிக நுணுக்கமாக ஆராய்ந்து,உண்மை சம்பவங்களின் பின்னணியை இணைத்து, நேர்மையான, உண்மையான அரசியல் சினிமாவாக வந்து மக்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்ற திரைப்படம் – விசாரணை. இயக்குநர் வெற்றிமாறன் தற்போது அத்திரைப்படத்தின் முழுமையான திரைக்கதைக்கு நூல் வடிவம் கொடுத்து வெளியிட்டிருக்கிறார்.
அதிகார வர்க்கம் என்னும் ஆக்டோபசின் ஒவ்வொரு கரத்திலும் சொட்டும் ரத்தத் துளிகளை உண்மைக்கு நெருக்கமாக அல்ல… உண்மையாகவே காட்சிப்படுத்தியிருக்கிறார்.
எளியவர்களின் வலி பேசும் வலிமையான படைப்புக்கு,சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்து உச்சி முகர்கிறான் விகடன்.
~ விகடன் விமர்சனக் குழு
Reviews
There are no reviews yet.