கிணற்றுத் தவளையாக வாழும் மனிதர்கள் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்துவிடுகின்றனர். ஆனால், சுதந்திரத்தோடு தேடல் மனம்கொண்ட மனிதர்கள் உலகத்தை அறியத் துடிக்கிறார்கள். அதற்கு, பயணப்படுதல் அவசியமானது.பயணம் எல்லோருக்கும் வாய்த்தாலும், ரசிப்புத்தன்மையும் கூர்ந்த பார்வையும் இருந்தால் மட்டுமே இயற்கையைக் கற்கமுடியும். அப்படிப் பயணத்தை விரும்பி _ ஊர்சுற்றி பலவற்றைப் பார்த்துப் பிரமித்த எஸ்.ராமகிருஷ்ணன், அந்த அற்புத அனுபவத்தை சுவாரஸ்யமாக ஆனந்த விகடனில் ‘தேசாந்திரி’யாக வாசகர்களுடன் பகிர்ந்துகொண்டார். அந்தப் பயண அனுபவத்தை ஒருங்கே பெறுவதற்கு, இதோ அழகிய புத்தக வடிவம்.சென்றுவரும் இடங்களைப் பற்றி எழுதும் பலர், அதனை வெறும் பயணக் கட்டுரைகளாகவே எழுதுகின்றனர். ஆனால், எஸ்.ராமகிருஷ்ணன், அந்த இடம் குறித்த பல வரலாற்றுக் குறிப்புகள், அவ்விடங்களை அடைந்தபோது நேரும் சிலிர்ப்புகள் போன்றவற்றை அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.மலைகள், ஆறுகள், அருவிகள், பாலைவனம் போன்ற இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளையும், சாரநாத் ஸ்தூபி, சமணப் படுகைகள், ஆர்மீனிய தேவாலயம், சரஸ்வதி மகால் நூலகம் போன்ற வரலாற்றுச் சின்னங்களையும் தன் எழுத்தோவியங்களால் ரசிக்க வைக்கிறார்… பாதுகாக்கப்படாத சின்னங்களைக் குறிப்பிட்டு ஆதங்கப்படுகிறார்.பயணத் தடத்தில் நம்மைச் சுற்றி இருக்கும் சாதாரண நிகழ்ச்சிகளைக்கூட சிலாகித்து வெளிப்படுத்தும் எழுத்துநடை, வாசிப்பவரை நெகிழ வைக்கிறது. எஸ்.ராமகிருஷ்ணனின் வார்த்தை வசீகரத்துக்கு நிகராக, அவ்விடங்களை ஓவியத்தில் வார்த்திருக்கிறார் மகி. ஊர்சுற்றும் பாக்கியம் கிடைக்காதவருக்கு இந்நூல் பெரும் கொடையாக இருக்குமென நம்பலாம். ‘தேசாந்திரி’யின் கைப்பிடித்துப் பயணமாகுங்கள்!கிணற்றுத் தவளையாக வாழும் மனிதர்கள் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்துவிடுகின்றனர். ஆனால், சுதந்திரத்தோடு தேடல் மனம்கொண்ட மனிதர்கள் உலகத்தை அறியத் துடிக்கிறார்கள். அதற்கு, பயணப்படுதல் அவசியமானது.பயணம் எல்லோருக்கும் வாய்த்தாலும், ரசிப்புத்தன்மையும் கூர்ந்த பார்வையும் இருந்தால் மட்டுமே இயற்கையைக் கற்கமுடியும். அப்படிப் பயணத்தை விரும்பி _ ஊர்சுற்றி பலவற்றைப் பார்த்துப் பிரமித்த எஸ்.ராமகிருஷ்ணன், அந்த அற்புத அனுபவத்தை சுவாரஸ்யமாக ஆனந்த விகடனில் ‘தேசாந்திரி’யாக வாசகர்களுடன் பகிர்ந்துகொண்டார். அந்தப் பயண அனுபவத்தை ஒருங்கே பெறுவதற்கு, இதோ அழகிய புத்தக வடிவம்.சென்றுவரும் இடங்களைப் பற்றி எழுதும் பலர், அதனை வெறும் பயணக் கட்டுரைகளாகவே எழுதுகின்றனர். ஆனால், எஸ்.ராமகிருஷ்ணன், அந்த இடம் குறித்த பல வரலாற்றுக் குறிப்புகள், அவ்விடங்களை அடைந்தபோது நேரும் சிலிர்ப்புகள் போன்றவற்றை அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.மலைகள், ஆறுகள், அருவிகள், பாலைவனம் போன்ற இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளையும், சாரநாத் ஸ்தூபி, சமணப் படுகைகள், ஆர்மீனிய தேவாலயம், சரஸ்வதி மகால் நூலகம் போன்ற வரலாற்றுச் சின்னங்களையும் தன் எழுத்தோவியங்களால் ரசிக்க வைக்கிறார்… பாதுகாக்கப்படாத சின்னங்களைக் குறிப்பிட்டு ஆதங்கப்படுகிறார்.பயணத் தடத்தில் நம்மைச் சுற்றி இருக்கும் சாதாரண நிகழ்ச்சிகளைக்கூட சிலாகித்து வெளிப்படுத்தும் எழுத்துநடை, வாசிப்பவரை நெகிழ வைக்கிறது. எஸ்.ராமகிருஷ்ணனின் வார்த்தை வசீகரத்துக்கு நிகராக, அவ்விடங்களை ஓவியத்தில் வார்த்திருக்கிறார் மகி. ஊர்சுற்றும் பாக்கியம் கிடைக்காதவருக்கு இந்நூல் பெரும் கொடையாக இருக்குமென நம்பலாம். ‘தேசாந்திரி’யின் கைப்பிடித்துப் பயணமாகுங்கள்!
தேசாந்திரி (விகடன் பிரசுரம்)தேசாந்திரி (விகடன் பிரசுரம்)
Brand :
- Edition: 01
- Published On: 2016
- ISBN: 9788189780487
- Pages: 272
- Format: Paperback
- Edition: 01
- Published On: 2016
- ISBN: 9788189780487
- Pages: 272
- Format: Paperback
Out stock
Out of stock
SKU: 9788189780487
Category: பயணக்குறிப்புகள்
Author:எஸ். ராமகிருஷ்ணன்
Be the first to review “தேசாந்திரி (விகடன் பிரசுரம்)தேசாந்திரி (விகடன் பிரசுரம்)” Cancel reply
Out of stock
Reviews
There are no reviews yet.