OTT என்றால் என்ன என்று பெரும்பாலானவர்களுக்கு தெரியாது. ஆனாலும் தினம் தினம் இந்த வார்த்தையைப் பயன்படுத்தாதவர்கள் மிகக் குறைவு. இன்று திரையரங்கை நம் கைக்குள் கொண்டு வந்துவிட்டது ஓடிடி. இனி இதுதான் திரையுலகின் எதிர்காலம் என்று உறுதியாகச் சொல்லும் அளவுக்கு ஓடிடி ஆட்சி செய்யத் தொடங்கிவிட்டது.
ஓடிடி என்றால் என்ன, அது எப்படித் தொடங்கப்பட்டது, உலக அளவில் அதன் இடம் என்ன, இந்தியாவில் ஓடிடி நிகழ்த்திக் கொண்டிருக்கும் மாற்றங்கள் என்ன, தமிழில் ஓடிடி இன்று எந்த நிலையில் உள்ளது. இதன் எதிர்காலம் என்ன, வாடிக்கையாளர்கள் ஓடிடியை எப்படிப் பார்க்கிறார்கள். ஓடிடியில் உங்கள் திரைப்படமோ வெப்ச்ஸோ வரவேண்டும் என்றால் ஓர் இயக்குநராக அல்லது ஓர் எழுத்தாளராக அல்லது ஒரு தயாரிப்பாளராக நீங்கள் செய்ய வேண்டியது என்ன, ஓடிடி தளங்களை அணுகுவது எப்படி, ஓடிடியில் ஒரு படைப்பை உருவாக்கும்போது வரும் இடர்ப்பாடுகள் யாவை, அதன் வணிக சாத்தியங்கள் யாவை என ஓடிடியின் அடிப்படை தொடங்கி அனைத்தையும் சுவாரஸ்யமாக விளக்கி இருக்கிறார் கேபிள் சங்கர்.
ஒரு வாடிக்கையாளராய் ஓடிடி பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளவும், ஒரு படைப்பாளியாய் ஓடிடி தளத்தில் காலடி எடுத்து வைக்கவும் உதவும் நூல்.
Reviews
There are no reviews yet.