கிழக்கு இலண்டனிலுள்ள ஹக்னி எனும் இடத்தில 1930 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் நாள் பிறந்த பின்ட்டருக்குத் தற்போது 77 வயது நிறைகிறது. தொழிலாளி வர்க்கக் குடும்பத்தில் பிறந்த பின்ட்டரின் தகப்பனார் ஒரு தையற்காரர் ஆவார். மிகுந்த ஒழுக்கவாதியான தந்தையை விடவும் தாயிடமே அதிகமும் நெருக்கம் கொண்டவராகப் பின்ட்டர் வளர்ந்தார். இரண்டாம் உலகப் போர்க் காலகட்டத்தில் குண்டுவீச்சிலிருந்து தப்புவதற்காக இலண்டனுக்கு வெளியில் கிராம்வெல் எனும் இடத்தில் பிற சிறுவர்களோடு மூன்று ஆண்டுகள் அவர் வாழ நேர்ந்தது. குடும்பத்திலிருந்த பிரிந்து வாழ நேர்ந்த அந்த சிறுபிள்ளைப் பருவமும் குண்டுவீச்சின் சத்தமும் தன்னால் மறக்கவியலாதவை என்கிறார் பின்ட்டர்.பின்ட்டர் நாடகமும் நடிப்பும் பயின்றார். பயிலும் போதே அடங்கமறுத்தமைக்காகக் கல்லூரி ஒழுக்கநடவடிக்கைக்கு ஆளானார் பின்ட்டர். பிரித்தானியப் படையில் சேர மறுத்தமைக்காக வழக்குமன்றத்தில் அபராதத் தொகையைக் கட்டியவராகவும், என்றும் போரை வெறுத்தவராகவுமே அவர் இருந்தார். ஐரோப்பாவின் பெரும்பாலுமான சிந்தனையாளர்கள் போலவே பின்டரும் யூதவழித் தோன்றல் என்பதும் நாவலாசிரியான அன்டோனியோ பிரேசர் இவரது துணைவியார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.பின்ட்டர் கான்ஸர் நோயினால் அவதிப்பட்டு வந்தார். மரணத்தின் விளம்புக்குச் சென்று மீண்டதாகவும், ஒரு நிமிடம் ‘நான் மரணத்தின் பிடியிலும் மறுநிமிடம் நான் வாழ்வின் மடியிலும் இருந்தேன்’ எனவும் இது குறித்துக் குறிப்பிடுகிறார் அவர். நோபல் பரிசு அறிவிக்கப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் அயர்லாந்தில் தனக்குக் கௌரவமளிக்க நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு இங்கிலாந்து திரும்பிக் கொண்டிருந்த வேளை, டப்ளின் நகரத்துப் பிளாட்பாரத்தில் விழுந்து தனது முகத்தை உடைத்துக் கொண்டார் அவர். நோயினால் உடல் தளர்வுற்ற நிலையில் அவருக்குக் கிடைத்த நோபல் விருது அவரது படைப்பு வாழ்வில் அவருக்குக் கிடைக்க வேண்டிய அங்கீகாரம் என்பதில் எவருக்கும் முரண்பாடிருக்க நியாயமில்லை.
கலை மெய்மை அரசியல்
Brand :
- Edition: 01
- Published On: 2016
- ISBN: 9788123422441
- Pages: 32
- Format: Paperback
Out stock
Out of stock
SKU: 9788123422441
Categories: கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள்
Author:ஹெரால்ட் பின்ட்டர்Translator: யமுனா ராஜேந்திரன்
Be the first to review “கலை மெய்மை அரசியல்” Cancel reply
Out of stock
Reviews
There are no reviews yet.