உலகம் தோன்றியது எப்படி என்ற கேள்விக்கு இன்றுவரை முழுமையான விளக்கம் கிடைக்கவில்லை. விஞ்ஞானம் புதிய புதிய கருதுகோள்களோடு விளக்கங்களை உருவாக்கிக் கொண்டேயிருக்கிறது. உலகம் எப்படித் தோன்றியது என்ற கேள்விக்கு இக்கதைகள் வியப்பான பதில்களைத் தருகின்றன. இந்தக் கதைகளைச் சொன்ன மனிதர்கள் குகைகளில் வசித்தார்கள். இருட்டைக் கண்டு பயந்துபோய் அதையொரு கதையாக்கினார்கள். கதைகள் பாறைகள் உருவத்தினுள் ஒளிந்திருப்பதாக நம்பினார்கள். பலநூறு வருடங்கள் கடந்துவிட்டபோதும் இந்தக் கதைகள் கூழாங்கற்களைப் போல வசீகரமாகியிருக்கின்றன. உலகமெங்கும் உள்ள முப்பது பழங்குடியினர்கள் சொன்ன கதைகளிலிருந்து தேர்வு செய்து இத்தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் வாசிப்பதற்காகவும் திரும்பச் சொல்வதற்குமே இந்தமுயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
கால் முளைத்த கதைகள்
Brand :
- Edition: 1
- Year: 2018
- Format: Paper Back
Category: சிறுவர் நூல்கள்
subject: CHILDREN
Author:எஸ் ராமகிருஷ்ணன்
Be the first to review “கால் முளைத்த கதைகள்” Cancel reply
Reviews
There are no reviews yet.