ஜெயகாந்தன்

ஜெயகாந்தன்

ஜெயகாந்தன் 1934-ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் என்ற ஊரில், ஒரு வேளாண் குடும்பத்தில் தண்டபாணிப் பிள்ளை,மகாலெட்சுமி அம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். பள்ளிப்படிப்பில் நாட்டம் இல்லாமையால், ஐந்தாம் வகுப்பிலேயே பள்ளி வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைத்தார். உலகியல் அனுபவம் பெறவேண்டி, வீட்டை விட்டு வெளியேறி விழுப்புரம் சென்றார். அங்கு, அவர் மாமாவின் மேற்பார்வையில் வளர்ந்தார். அவர் ஜெயகாந்தனைப் பொதுவுடைமைக் கோட்பாடுகளுக்கும் பாரதியின் எழுத்துகளுக்கும் அறிமுகப்படுத்தினார்.
~நன்றி: விக்கிப்பீடியா

ஜெயகாந்தனை நிகழ்காலத்தில் அதே கம்பீரத்துடன் உலவவிடும் படம் ரவிசுப்பிரமணியனின் ஜெயகாந்தன் பற்றிய ஆவணப்படம். ஜெயகாந்தன், மஹாபாரதம் பற்றி பேசும் ஒரு சின்ன கிளிப்பை, ரவியின் அனுமதியுடன் அவரது படத்திலிருந்து எடுத்து, வெண்முரசு ஆவணப்படத்தில் பயன்படுத்தியிருக்கிறோம் என்பதை இங்கு நன்றியுடன் குறிப்பிட்டுக்கொள்கிறேன்.

சூரியனுக்கும் லைட் அடித்துக் காட்டக்கூடிய சூழ்நிலையில் நாம் உள்ளோம். பாரதியைத் தெரிந்த அனைவரும், திருலோகத்தையும் அறிந்தே பேச, ரவிசுப்பிரமணியனின் ‘திருலோகம் என்றொரு கவி ஆளுமை’ வழி வகுக்கும். அவரது அனைத்து ஆவணப்படங்களையும் இங்கே https://www.youtube.com/watch?v=ahC22jv1JjQ காணலாம்.
~நன்றி: ஜெயமோகன்

  • 24 April 1934
  • Male
  • 4