பதின்ம வயது எல்லோர் வாழ்விலும் இனிமையான வயது. பாரங்களற்ற பருவம். அதே அளவு சவால்களும் கடுமையான சறுக்கல்களும் ஏற்றங்களும் கொண்ட பருவமும்கூட. தன் திறன்களை அறிதலும், தன்னைச் சுற்றி என்ன நிகழ்கின்றது என்ற புரிதலும், எதிர்காலத்தில் எந்தச் சவால்களையும் சந்திக்க வைத்துவிடும். இப்புத்தகத்தில் வரும் தருணங்களை நீங்கள் சந்திக்காமலும் போகலாம், ஆனால் உங்கள் நண்பர்களுக்கு உதவலாம். இளையோர் வாசிக்கும்படி இதனை எழுதி இருந்தாலும், இளையோர்களுடன் உறவாடும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆர்வலர்கள் என அனைவருக்குமான புத்தகம் இது.
இது கொஞ்சம் இளையோர் உளவியலையும் மனதையும் புரிந்துகொள்ளும் முயற்சி. சக நண்பர்களை, மிக முக்கியமாக நம்மை, நம் பலங்களையும் பலவீனங்களையும் புரிந்துகொள்ளும் முயற்சி.
Reviews
There are no reviews yet.