ஷங்கர் ராமசுப்ரமணியன்
1975-ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தவர். இயந்திரப் பொறியியலில் பட்டயப்படிப்பு முடித்தவர். 1999-லிருந்து பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் இவரது ஈடுபாடுகள் இலக்கியம், சினிமா, நாட்டார் வழக்காற்றியல், பொருள்சார் கலாசாரம், மானுடவியல், பண்பாட்டு வரலாறு, மருத்துவம், சமயம், தத்துவம். எட்டு கவிதைத் தொகுதிகள், இரண்டு விமர்சன நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுதியான ’ஆயிரம் சந்தோஷ இலைகள்’ புத்தகத்துக்கு கனடா இலக்கியத் தோட்ட அமைப்பு கவிதைப் பிரிவில் 2017-ம் ஆண்டு விருது வழங்கியது. இசை,ஓவியங்கள் சமையல், பயணம், பிராணி வளர்ப்பு, பராக்கு பார்ப்பதில் விருப்பம் உடையவர்.
~ ஷங்கர் வலைப்பூ
- 1975
- Male
- 13