ஜோ டி குரூஸ்
ஜோ டி குருஸ் (Joe D Cruz), பிறப்பு: 17 மே 1963) தமிழ் நெய்தல்குடிகளின் வாழ்வை இலக்கியத்தில் பதிவுசெய்த குறிப்பிடத்தக்க எழுத்தாளர் ஆவார். திருநெல்வேலி மாவட்டம் கடற்கரை கிராமமான உவரியில் பிறந்தவர். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சரக்குக் கப்பல் நிறுவனங்களில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தலைமைப் பொறுப்பில் பணியாற்றியவர். தற்போது சென்னை இராயபுரத்தில் வணிகக் கப்பல்களுக்கான ஆலோசனை நிறுவனம் ஒன்றையும் நடத்திவருகிறார். இவரது இரு புதினங்களும் மீன்பிடி தொழில் புரியும் பரதவர் வாழ்க்கையைக் களமாகக் கொண்டவை.
~ நன்றி: விக்கிப்பீடியா
- 17 May 1963
- Male
- 1