டி. ஆர். நாகராஜ்
முனைவர் டி.ஆர்.நாகராஜ் ( (1954-1998) ஒரு இந்திய கலாச்சார விமர்சகரும், அரசியல் வர்ணனையாளரும் மற்றும் இடைக்கால மற்றும் நவீன கன்னட கவிதைகளைப் படைக்கும் எழுத்தாளரும் ஆவார். இவர் கன்னடம் மற்றும் ஆங்கில மொழிகளில் எழுதி வந்தார். தலித் இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவர் ஆவார். சாகித்யா கதனா என்ற படைப்புக்காக சாகித்ய அகாதமி விருதினைப் பெற்றார். தலித் மற்றும் பகுஜன் அரசியலில் புதிய வெளிச்சம் போட்ட சில இந்திய சிந்தனையாளர்களில் இவரும் ஒருவர் ஆவார். சாதி அமைப்பு மற்றும் தீண்டாமைப் பிரச்சினை குறித்த காந்தி – அம்பேத்கர் ஆகியோரிடையேயான விவாதத்தை 21 ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் தலைவிதியைத் தீர்மானிக்கும் மிக முக்கியமான சமகால விவாதமாக அவர் கருதினார்.
நன்றி: விக்கிப்பீடியா
- 20 February 1954
- Male
- 1