பெற்றோர், பிள்ளைகள் இந்த இரண்டு தரப்பினரின் ஆவலையும் நிறைவேற்றும் வகையில் இந்தப் புத்தகம் இருக்கும். பிள்ளைகளும் வெகு காலத்திற்கு முன்னதாகவே தாங்கள் ஈடுபடப் போகும் துறை பற்றிய விவரங்களை விரல் நுனியில் வைத்துக் கொள்ள ஆசைப்படுகிறார்கள்.இந்தக் கேள்வி எல்லாருடைய மனத்திலும் எழுவது இயற்கை. இன்றைய பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தில் அக்கறை உள்ளவர்களாக இருப்பதால் அடுத்து அவர்களை என்ன படிக்க வைக்கலாம் என்று கேட்க நினைக்கிறார்கள்.உயிரித் தொழில் நுட்பத்தின் மூலம் வேளாண்மை முதற்கொண்டு விண்வெளி ஆராய்ச்சி வரை எத்தனையோ துறைகளில் புதுமைகளைப் படைக்கலாம். இதற்குப் பொருத்தமான தகுதிகளைப் பெறுவது எப்படி?உயிரித் தொழில்நுட்பம் என்றால் என்னவென்றே தெரியாதவர்களும் இதை வாங்கிப் படிக்கலாம்.நமக்கு எது தெரியாது என்பதைத் தெரிந்து கொள்கிறவர்கள் மிக விரைவில் முன்னுக்கு வருவார்கள். நமக்குத் தெரியாதது என்று இந்த உலகத்தில் என்ன இருக்கப்போகிறது என்று நினைப்பவர்களும் இதைப் படிக்கலாம். படித்த பிறகுதான் அட… இத்தனை விவரங்களைத் தெரிந்து கொள்ளாமல் இருந்திருக்கிறோமே என்று நினைக்கத் தோன்றும்.கம்ப்யூட்டர் துறையை மிஞ்சப்போகும் சாதனைத் தொழிலாக உயிரித் தொழில்நுட்பம் வளர இருக்கிறது என்று உலகமே கணிக்கிறது.அதனால் உயிரித் தொழில் நுட்பப் படிப்பு பற்றிய தகவல்களைத் தொகுத்து அளிக்கவேண்டும் என்ற எங்களது இடைவிடாத முயற்சியின் பலன்தான் இந்தப் புத்தகம்.
வளமான வாய்ப்புகளை தரும் பயோ டெக்னாலஜி படிப்புகள்
Brand :
- Edition: 01
- Published On: 2007
- ISBN: 978938257737-9
- Pages: 208
- Format: Paperback
SKU: 978938257737-9
Category: கட்டுரைகள்
Author:ம. லெனின்
Be the first to review “வளமான வாய்ப்புகளை தரும் பயோ டெக்னாலஜி படிப்புகள்” Cancel reply
Reviews
There are no reviews yet.