சுயசரிதை நூல்கள் என்றாலே அவை பெரும்பாலும் தனி நபரை புகழ்பாடும் வகையிலேயே இருக்கும். ஆனால், அதையும் தாண்டி வாழ்க்கையில் ஒருவர் தனது இளமைக் காலம் முதல் சாதித்த வரையில் சந்தித்த ஏற்ற இறக்கங்களைத் தயங்காமல் பதிவுசெய்திருப்பதோடு மற்றவர்களுக்குப் பயனுள்ளதாக அமையும் வகையில் பல்வேறு கருத்துகளை உணர்த்தி எழுதும் வகையில் இருப்பது சில நூல்கள்தான். அந்த வரிசையில் இந்த நூல் தனிஇடம் பெறுகிறது.
மெடிமிக்ஸ், மேளம். சஞ்சீவனம்’ போன்ற உலக பிராண்டுகளின் தலைவரான தொழிலதிபர், கொடையாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் என்று பல முகங்களைக் கொண்ட அனூப்பின் வாழ்க்கை வரலாற்று நூல் இது.
பாதை, பயணம், உச்சங்கள், வரையறைகள், எதிரொலிகள், படிப்பினைகள், பகிர்வுகள் மைல் கல்கள் போன்ற தலைப்புகளில் 24 கட்டுரைகள் படிக்க படிக்க சுவாரசியமாக இருப்பதோடு, சாதிக்க வேண்டும் என்ற வேட்கையையும் ஊக்கு விக்கிறது.
பெருந்துன்பங்களை எதிர்கொள்ளும்போ தும் பின்னடையாமல் மீண்டு வருவது எப்படி, நீடித்த உறவுகளை வளர்ப்பது எப்படி. தடைகளைத் தாண்டி சாதனையானராக முன்னே றுவது எப்படி என்று சோர்ந்து கிடப்போரின் தன்னம்பிக்கை வளர்த்து சாதனையாளர்களை உருவாக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது இந்த நூல். நூல் பிரியர்களுக்கு இது நல்லதொரு அனு பவம்.
Reviews
There are no reviews yet.