தூங்காநகர் நினைவுகள்
மதுரையின் முழுமையான வரலாறு
மதுரையில் நவீன மனிதன் நடமாடுகிறான். பாறைகளில் ஓவியங்கள் தீட்டுகிறான். சப்தங்கள் – மொழி உருவாகிறது. சங்க காலத்திற்குள் நுழைகிறோம், கீழடியைச் சுற்றிப்பார்க்கிறோம். சமணர்கள், யவனர்கள், கண்ணகி, கோவலன், மெகஸ்தனஸ், யுவான் சுவாங், இபன் பதூதா தொடங்கி ஓவியர் கஸ்த, புகைப்பட கலைஞர் ஒச்சப்பன் வரை மதுரையின் குறுக்கும் நெடுக்குமாக நடமாடியபடி இருக்கிறார்கள்.
மதுரையில் கல்பாவிய சந்துகளின் வழியே வரலாற்றின் ஒவ்வொர் அத்தியாயத்திற்குள்ளும் நம்மை இந்த நூல் அழைத்துச் செல்கிறது. மதுரையின் முழுமையான வரலாறு அ.முத்துக்கிருஷ்ணனின் சொற்களில் கண் முன்னே விரிந்துச் செல்கிறது வாசிக்க வாசிக்க வரலாற்றுக்குள் நாமும் செல்கிறோம். ஒரு ரசவாதம் நிகழ்கிறது.
Reviews
There are no reviews yet.