உணவு, உடை, உறைவிடம் இந்த மூன்றும் இல்லாதவர்கள் உலகத்தில் கோடிக்கணக்கில் இருக்கிறார்கள். இந்த அடிப்படைத் தேவைகளை எல்லாருக்கும் கிடைக்கச் செய்துவிடலாம்.ஆனால் கோடிக்கணக்கான இளைஞர்கள் குறிப்பிட்ட ஒரு காரணத்தினால், உள்ளம் வெதும்பிப் போய் நிற்கிறார்கள். இளைஞர்களுக்கு மட்டும்தான் இந்தக் குறையா? இல்லை. எல்லா வயதினரையும் இது பாதித்திருக்கிறது.இவர்களை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது. ஏதோ பிறந்தோம்… வளர்ந்தோம்… போவோம்… என்று வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கும் இவர்களை மாற்ற வேண்டிய தேவை நமக்குப் பெருமளவில் இருக்கிறது.தாங்கள் யார், தங்களால் எதெல்லாம் முடியும் என்று இவர்களுக்குத் தெரிவதில்லை. அதைத் தெரிந்து கொண்டால் இவர்கள் எத்தனையோ சாதனைகளைப் படைப்பார்கள். இவர்கள் உறக்கத்தில் இருப்பவர்கள். இவர்களை உறக்கத்திலிருந்து எழுப்புவது நமது கடமை.தேவை உள்ளவர்களுக்குத் தேவைப்படுகிறவற்றைத் தங்கு தடையில்லாமல் கொடுக்கவேண்டும். இது எல்லாராலும் இயலுமா? அமுதசுரபி இருந்தால்தானே அப்படி அள்ளி அள்ளிக் கொடுக்கலாம் என்று நினைப்பீர்கள். அமுத சுரபியை மிஞ்சும் அட்சய பாத்திரங்கள் நம்மிடம் நிறையவே இருக்கின்றன. அத்தகைய பாத்திரங்களை நாமும் பெறலாம் என்பது பலருக்கும் புரிவதில்லை.இருக்கிறவற்றை விட்டுவிட்டு இல்லாதவற்றைத் தேடிப் போய்க் கொண்டு இவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்குப் பல உண்மைகளைப் புரிய வைத்துத் தன்னம்பிக்கையை அளிக்கிறது இந்தப் புத்தகம்.
தன்னம்பிக்கை (சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்)
Brand :
- Edition: 01
- Published On: 2007
- ISBN: 9789382577195
- Pages: 136
- Format: Paperback
SKU: 9789382577195
Category: கட்டுரைகள்
Author:ம. லெனின்
Be the first to review “தன்னம்பிக்கை (சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்)” Cancel reply
Reviews
There are no reviews yet.